திங்கள், 25 மே, 2020

சுதந்திர சுவாசம் - கவிதை

சுதந்திர சுவாசம் - கவிதை
-------------------------------------------
பறவைகள் மரக்கிளைகளில்
சுதந்திரமாய் பாடிக் கொண்டு

மீன்கள் நீர்நிலைகளில்
சுதந்திரமாய் ஆடிக்கொண்டு

விலங்குகள் காடுகளில்
சுதந்திரமாய் ஓடிக்கொண்டு

மனிதர்கள் நாடுகளில்
சுதந்திரமாய் கூடிக்கொண்டு

இயற்கையின் இன்பத்தை
சுதந்திரமாய் சுவாசித்துக்கொண்டு
------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

வெள்ளி, 22 மே, 2020

பழைய வீடு - கவிதை

பழைய வீடு - கவிதை
-----------------------------------
தரையில் கிடந்த பொருட்கள்
மாறிப் போய் இருக்கும்

சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள்
மாறிப் போய் இருக்கும்

கம்பிகளில் படிந்த ரேகைகள்
மாறிப் போய் இருக்கும்

காலி செய்த வீட்டின்
முகப்பு முகம் மட்டும்

கனத்த கதவோடு
காத்துக் கொண்டு இருக்கும்
----------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

வியாழன், 21 மே, 2020

முகமூடி முகங்கள் - கவிதை

முகமூடி முகங்கள் - கவிதை 
————————————
சில பேர் 
பார்த்தும் பார்க்காதது போல் போகிறார்கள்

சில பேர் 
பார்த்துப் பேசியபடி போகிறார்கள்

சில பேரைப் 
பார்த்தும் பார்க்காததுபோல் போகிறோம்

சில பேரைப் 
பார்த்துப் பேசியபடி போகிறோம்

முகமூடி இருந்தாலும் 
தெரிந்த முகங்கள் 
தெரியாமல் போவதில்லை 
——— ————————-நாகேந்திர பாரதி

——————————————————

செவ்வாய், 19 மே, 2020

காதல் பயணம் - கவிதை

காதல் பயணம் - கவிதை
-----------------------------------------
கண்களைப் பார்ப்பது
காதலைப் பாட

சேர்ந்து சிரிப்பது
செவ்விதழ் நாட

கூட நடப்பது
கோதையைக் கூட

பேசிக் கிடப்பது
பித்தனாய்  வாட

பிறந்து வளர்வது
பிரிந்தபின் தேட
------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

திங்கள், 18 மே, 2020

சும்மா இருத்தல் - கவிதை

சும்மா இருத்தல் - கவிதை
------------------------------------------------
சும்மா இருக்கச்
சொல்லிப் போனார்கள்

சும்மா இருந்து
பார்த்தால் தெரியும்

சும்மா இருக்கும்
சிரமங்கள் புரியும்

சும்மா சும்மா
எண்ணங்கள் வந்தால்

சும்மா இருக்கும்
சுகமென்று கிடைக்கும்
---------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book