வியாழன், 27 பிப்ரவரி, 2020

இது போதும் இப்போது - கவிதை

இது போதும் இப்போது - கவிதை
-----------------------------------------------------
பார்த்ததும்  சிரித்ததும்
பழகியதும் அப்போது
நினைப்பதும் மகிழ்வதும்
நெகிழ்வதும் இப்போது
இது போதும் இப்போது

தொட்டதும் தொடர்ந்ததும்
துடித்ததும் அப்போது
விட்டதும் விலகுவதும்
விரும்புவதும் இப்போது
இது போதும் இப்போது
----------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book


2 கருத்துகள்:

  1. உண்மை. ஆனாலும்கூட சிலர் அடங்க மறுக்கிறார்களே. நான் உங்களைப்பற்றி சொல்லவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்

    பதிலளிநீக்கு