திங்கள், 17 ஜூன், 2019

கவிதை இதழ்கள் - கவிதை

கவிதை இதழ்கள் - கவிதை
--------------------------------------------
காதல் தடவிய
கவிதை கேட்டாள்

இதழைத் தடவி
இதுதான் என்றான்

பொய்க் கோபத்தில்
உதட்டைச்  சுழித்தாள்

புதிய  கவிதையைப்
பூத்துச் சிரித்தாள்

உதட்டுக்குள் கவிதையை
ஒளித்து வைத்திருப்பவள்
--------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

1 கருத்து:

 1. காதல் தடவிய
  கவிதை கேட்டாள்

  இதழைத் தடவி
  இதுதான் என்றான்

  ஹைய்யோ ..என்னமா யோசிக்கிறீங்க...

  பதிலளிநீக்கு