ஞாயிறு, 10 மார்ச், 2019

விதை முதல் வேர் வரை

விதை முதல் வேர் வரை
-------------------------------------------
கற்பனை விதை விழுந்தால்
கவிதை முளைத்து வரும்

கருத்து குருத்து விட்டால்
கவிதைச் செடி வளரும்

இலையாகிப் பூவாகிக்
கவிதை மணம் வீசும்

காயாகிக் கனியாகிக்
கவிதை பழுத்து வரும்

வேராகி விழுதாகிக்
கவிதை நிலைத்திருக்கும்
-----------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

8 கருத்துகள்:

 1. விழுகிற விதை நல்ல விதையாய் இருக்க ஆசை!

  பதிலளிநீக்கு
 2. விழுகிற விதை நல்ல விதையாய் இருக்க ஆசை!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் !

  கதைமுதற் கற்பனை எல்லாம் ! நம்மின்
  கண்களில் புகுந்திடும் காட்சி- நல்ல
  விதைமுதல் வேர்வரை எல்லாம்! அந்த
  விழுந்தரைக் குணத்தின் மாட்சி !

  அருமை சகோ தொடர வாழ்த்துக்கள்

  வாழ்க நலம் !

  பதிலளிநீக்கு
 4. கவிதை நிலைத்திருக்கட்டும்

  பதிலளிநீக்கு
 5. அருமை ...மிக நன்றாக இருக்கிறது..

  பதிலளிநீக்கு