வெள்ளி, 1 மார்ச், 2019

சைக்கிள் ஓட்டம்

சைக்கிள் ஓட்டம்
-----------------------------------
வாடகைக்கு விடுவதற்கென்றே
ஒரு ஓட்டை சைக்கிள்

உடைந்த ஸ்டாண்டோடு
சுவரோரம் ஒய்யாரமாய்

அமுக்கிப் பார்த்தாலும்
அடிக்காத பெல்லோடும்

அடிக்கடி கழலும்
பிசுபிசுத்த  செயினோடும்

சைக்கிள் ஓட்டக்
கற்றுக் கொண்டதை விட

சைக்கிள் பாகங்களைக் 
கற்றுக் கொண்டதே அதிகம்
----------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

4 கருத்துகள்: