வியாழன், 5 ஜூலை, 2018

வீட்டுச் சாப்பாடு

வீட்டுச் சாப்பாடு
------------------------------
கொல்லையில் மேயும்
கோழியும் வாத்தும்

விருந்தாளி வந்தால்
விருந்தாய் மாறிடும்

தொழுவத்தில் கட்டிய
பசுவின் பாலும்

தயிராய் மோராய்
நெய்யாய்   மாறிடும்

முற்றத்தில் தொங்கும்
புடலையும் பாகையும்

சோற்றுக்கு ஏற்ற
கறியாய்  மாறிடும்

விஞ்ஞான உலகம்
ஆனதன்   பின்னே

வீட்டுக்கு உள்ளே
மனிதர்கள் மட்டும்
----------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

3 கருத்துகள்:

  1. எல்லாம் மனிதனுக்காக மாறினாலும் மனிதர்கள் மட்டும் ... (ஏன் மாறவில்லை?) இதற்கு என்ன விடை? நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  2. இது விஞ்ஞான உலகம். மனிதன் இயந்திரம் ஆகிவிட்டான்; இனி மாறவே மாட்டானோ?!

    பதிலளிநீக்கு
  3. வீட்டுக்குள்ளே மனிதர்களும் மனிதர்களாக இல்லையே

    பதிலளிநீக்கு