சனி, 9 ஜூன், 2018

முரண் நலன்

முரண் நலன்
--------------------
முன்னுக்குப் பின்
முரணும் நலன்தானே

முன்னாலே சொன்னது
உலகம் தட்டையென்று

பின்னாலே வந்தது
உலகம் உருண்டையென்று

முன்னுக்குப் பின்
முரணாகச் சொன்னாலும்

முன்னுக்கு வந்தால்
முரணும் நலன்தானே
-------------------------------------------நாகேந்திர பாரதி
 http://www.nagendrabharathi.com

5 கருத்துகள்:

  1. முரண்பாடுகூட நல்லதுதான். இன்றைய உண்மையென்று நாம் நம்புவது நாளையே பொய்யாகிப் போய்விடுகிறது. Ephemeral value என்று சொல்வார்கள். நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு