சனி, 19 மே, 2018

கசங்கிய துணிகள்

கசங்கிய துணிகள்
-------------------------------
இங்கும் அங்கும்
இழுத்துப் போகும் குழந்தைகளும்

இதையும் அதையும்
போட்டுப் பார்க்கும் இளையோர்களும்

எடுத்துக் போட்டே
களைத்துப் போகும் பணியாளர்களும்

இடத்தை தேடி
அமரப் பார்க்கும் முதியோர்களும்

காசும் கார்டும்
கணக்குப் பார்க்கும் காசாளர்களும்

கலைத்துப்  போட்ட
துணிகள் போலே கசங்கிப் போவார்
-------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

3 கருத்துகள்:

  1. குழந்தைகளையும்,இளையோர்களையும், பணியார்களையும், முதியோர்களையும், காசாளர்களையும் "கசங்கிய துணிகள்" என்பது நல்ல கற்பனை.

    பதிலளிநீக்கு