வியாழன், 15 பிப்ரவரி, 2018

கிராமத்தை விட்டு ..


கிராமத்தை விட்டு ..
--------------------------------------
தாவிக் குதிக்க வழியின்றி
காய்ந்த சகதிக்குள் தவளைகள்

மேய்ச்சல் நிலத்தைக் காணாமல்
வீடு திரும்பும் ஆடுகள்

மரத்தில் பழுத்த இலைகளை
தூற்றிச் செல்லும் காற்று

குடிசை ஓலை ஓட்டைகளை
அடைக்கப் பார்க்கும் வெயில்

வெறித்துக் கிடக்கும் வானத்தோடு
கிராமத்தையும் விட்டு விட்டு ..
---------------------------------------------நாகேந்திர பாரதி 
http://www.nagendrabharathi.com

4 கருத்துகள்:

  1. இன்றைய நிலையில் இதை எல்லாம் பார்க்காமல் நாம் எல்லோரும் நகரம் வந்து விட்டோம்

    பதிலளிநீக்கு
  2. கிராமத்தை விட்டு - எளிய கவிதை வரிகள் அர்த்தம் நிறைந்தவை.

    பதிலளிநீக்கு