கொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை
--------------------
உலக யுத்தத்துக்குப் பிறகு
, ஏதோ தண்ணீர் யுத்தம், ஓசோன்
யுத்தம்னு சொல்றாங்க. இந்த
கொசு யுத்தம்னு ஒண்ணு ஏற்கனவே இங்கே
வந்திடுச்சுங்க.
இதுக்கு மக்கள் கொசு
ஆயில், கொசு காயில், கொசு
பேட், கொசு நெட்டுன்னு ஏகப்பட்ட
ஆயுதங்களோட கொசுவோட யுத்தம் நடத்துறாங்க.
ஆனா இந்த யுத்தம் இன்னும்
முடிஞ்ச பாடு இல்லைங்க.
இந்த கொசு ஆயிலை
உடம்பு மேலே தேய்ச்சுக்கிட்டா கொசு
மட்டும் இல்லே, நம்ம சொந்த
பந்தங்களும் நம்ம கிட்டே நெருங்க
மாட்டேங்கிறாங்க. அவ்வளவு நாத்தம் அடிக்குது . அப்புறம் இந்த கொசுக்களுக்கு இந்த
ஆயிலோட ஆயுளும் தெரிஞ்சு இருக்கு.
அந்த நேரம் முடிஞ்சதும் வந்து
அப்பிடுதுங்க. இதுக்காக அந்த எக்ஸ்பயரி டயத்துக்குள்ளே
மறுபடி மறுபடி தேச்சுக்க
வேண்டி இருக்குங்க.
இந்த கொசு காயில்
இருக்கே . அது நம்ம இன்ஜினியரிங்
படிப்பு மாதிரி, மெக்கானிக்கல் , எலக்ட்ரிகல்,
எலக்ட்ரானிக் ன்னு வித விதமா
வந்திருக்கு. அதிலே இருந்து வர்ற
புகையும் வாசமும் கொஞ்ச நாள்லே
கொசுக்களுக்கு பழகிப் போயிடுதுங்க. அதுக்கு
அப்புறம் கொசுக்கள் எல்லாம் அந்த காயில்
கிட்டே போயி கொஞ்சம் மோப்பம்
பிடிச்சிட்டு புது எனெர்ஜியோட வந்து
நம்மைக் கடிக்குதுங்க.
என்ன பண்றதுன்னு கொசு
பேட்டை வாங்கிப் பார்த்தோம். இதை பார்த்ததும் நமக்குள்ளே
இருக்கிற பேட் மிண்டன் சாம்பியன்கள் சிந்து, ஸ்ரீகாந்த் மாதிரி
எழும்பிடுறாங்க. அந்த பேட்டைத் தூக்கிட்டு
காத்திலே 'சர் சர்ர்' ன்னு
அடிக்கிறது ஜாலியா இருக்கு. நடுவிலே
'சடச்சட ' ன்னு சத்தம் கேட்டா
ஏக குஷி. ஏஸ் சர்வீஸ்
போட்ட மாதிரி, பிளேஸ் போட்ட
மாதிரி கொசுக்களை அடிச்சு துரத்திட்டோம்னு ஒரே
சந்தோசம்.
கொஞ்ச நாள் கழிச்சுத்தான்
தெரிய வர்றது. காத்திலே இருக்கிற
தூசி பறந்து வந்து இந்த
பேட்டிலே மோதறப்போ கூட இந்த சத்தம்
வரும்னு. நம்ம ஊரு தான்
தூசிகள் தலைநகரமாச்சே .சத்தம் அடிக்கடி வரத்தானே
செய்யும்.
சரின்னு கடைசியா கொசு
நெட்டை ட்ரை பண்றோம். இதுக்கு
டிவியில் ராத்திரி பகலா மார்க்கெட் பண்றதை
பார்த்தா அந்த
கொசுவுக்கே பயம் வந்திடும். ஆனா
அதுங்களுக்குதான் இது புரியாதே.
புரிஞ்ச நாம ஆளாளுக்கு ஒண்ணு
ஆர்டர் பண்றோம். கூரியரில் வர்ற இந்த பேக்கிங்கை
ஓபன் பண்றதுக்கு ரெம்ப கவனம் தேவைங்க.
மடக்காத மாடல்,வளைக்கிற மாடல்னு
ஏகப்பட்டது இருக்கா. வளைச்சு மடிச்சு உள்ளே வச்சிருக்காங்க. ஓபன்
பண்ணினதும் கொசுவை அடிக்கப் போற
ஜோரில் படார்னு வந்து நம்ம
மூஞ்சியில் அடிச்சுடுங்க.
பக்கத்துலே இருக்கிறவங்களுக்கு அடி படாம மெதுவா
பிரிச்சி டென்ட் மாதிரி படுக்கை
மேலே வச்சுடலாம். என்ன ஒண்ணு. ஜிப்பை
பிரிச்சு வெளியே போறது, உள்ளே
வர்றதுன்னு பெரிய
வேலைங்க. நொந்து போயிடுவோம்.
அர்ஜெண்டா பாத் ரூம் போகணும்னு
அவசரமா நெட்டோட ஜிப்பை பிரிச்சுட்டு
கஷ்டப்பட்டு வெளியே வந்தா வாசல்லே
காத்துக்கிட்டு இருக்கிற கொசுக்கள் ரெண்டு மூணு நைசா
நம்மளை நறுக்குன்னு கடிச்சு டேஸ்ட் பார்த்திட்டு
படக்குன்னு உள்ளே நுழைஞ்சுரும். திருப்பி
நம்ம ஜிப்பை மூடிட்டு பாத்
ரூம் போயிட்டு வந்து மறுபடி ஜிப்பை
பிரிச்சு உள்ளே நுழையிறப்போ இன்னும்
ரெண்டு மூணு கொசு உள்ளே
வந்திரும்.
மறுபடி நம்ம பேட்டை
எடுத்து அடிச்சுட்டு மறுபடி ஜிப்பை மூடணும்.இப்படி ஜிப்பை திறந்து
மூடியே நாம அலுத்துப் போயிடுவோம். சில
பேரு இந்த அனுபவத்திற்குப் பிறகு
தங்களோட பேண்டு , பைஜாமா ஜிப்பைப் போடுறதுக்கே
வெறுத்துப் போயிடுவாங்க. இதிலே
நம்ம டைலர் களுக்கு ஒரு
ஓப்பனிங் இருக்கு. ஜிப் இல்லாத புது
மாடல் பேண்ட்
, பைஜாமா செய்யலாம்.
என்னமோ போங்க. இப்படி
ஆயில், காயில், பேட் . நெட்டுன்னு நான்முக
யுத்தம் நடத்திக்கிட்டு இருந்தாலும், கொசுக்களை விரட்ட முடியலீங்க. என்ன
பண்றது. கொசுக்கள் கிட்டே ஏதாவது அமைதி
உடன்பாடு பண்ண முடியுமான்னு தான்
பார்க்கணும்.
---------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி
ஹா ஹா ஹா இவ்ளோ புலம்பலோ.. அனைத்திலும் சிறந்தது.. நுளம்புச் சுருள்கள்.. வட்ட வட்டமா சுருள் சுருளா இருக்கும் 12 மணிநேரம் எரியும்.. அதுதான் நுளம்பு/கொசு கிட்ட வரவே வராது ...
பதிலளிநீக்கு//கொசுக்கள் கிட்டே ஏதாவது அமைதி உடன்பாடு பண்ண முடியுமான்னு தான் பார்க்கணும்.//
பதிலளிநீக்கு:)
வணக்கம் !
பதிலளிநீக்குபங்கயம் பூத்துக் கங்கை
....பசுமையும் கொள்ளல் போல!
மங்கலம் பெருகி மக்கள்
....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
எங்கிலும் அமைதி வேண்டி
...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
...பொலிவுற வாழ்த்து கின்றேன் !
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !
பொங்கல் வாழ்த்துக்கள்
நீக்கு