வெள்ளி, 3 நவம்பர், 2017

மழைக் காலம்

மழைக் காலம்
---------------------------
காலம் ஓடும் போது
சில நினைவுகளை உதிர்த்து விட்டு
பல உறவுகளைக் கடத்திப் போகலாம்

புதிய உறவுகளின் படபடப்பில்
பழைய நினைவுகள் மக்கிப் போய்
மறைந்து போகலாம்

எப்போதாவது ஒரு மழைக் காலத்தில்
அப்போதுதான் முளைத்த
ஒரு பசுந்தளிரைப் பார்க்கும் போது
பழைய நினைவுகள் முட்டி வரலாம்
-------------------------------------------நாகேந்திர பாரதி 
http://www.nagendrabharathi.com

3 கருத்துகள்:

  1. மண்கீறிமுளைக்கிற பசுந்தளிர் பூண்ட நினைவுகள்...

    பதிலளிநீக்கு
  2. காலம் நினைவுகளை உதிர்த்து விட்டு
    பல உறவுகளைக் கடத்திப் போகலாம் It is happening.....
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு