வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ
----------------------------------
கண்ணைக் கசக்கும் குழந்தைக்கு
தூக்கம் வருவது தெரிகிறதாம்

பாட்டுப் பாடி தூங்க வைத்தால்
இரைச்சல் போலே இருக்கிறதாம்

தட்டிக் கொடுத்து தூங்க வைத்தால்
அடிப்பது போலே இருக்கிறதாம்

செல்லம் கொஞ்சித் தூங்க வைத்தால்
பயமுறுத்துவது போலே இருக்கிறதாம்

அலுத்துப் போன குழந்தை தானே
அரை மணி நேரத்தில் தூங்கியதாம்
------------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

3 கருத்துகள்:

 1. அலுப்பை எல்லோருக்கும் பொதுவில் வைப்போம்,
  குழந்தைக்கும் கூட/

  பதிலளிநீக்கு
 2. அலுத்துப் போன குழந்தை தானே
  அரை மணி நேரத்தில் தூங்கியதாம்
  unmai nilai nanru sako...

  பதிலளிநீக்கு