சனி, 2 ஜூலை, 2016

அதே மேகங்கள்

அதே மேகங்கள்
---------------------------
அதே மேகங்கள்

பள்ளிப் பருவத்தில் பார்த்த
அதே மேகங்கள்

கல்லூரிக் காலத்திலும்
வேலைக்குப் போகையிலும்

பார்க்காமல் விட்டு விட்ட
அதே மேகங்கள்

ஓய்வுக் காலத்தில்
உடகார்ந்து பார்க்கையில்

கருப்பும் வெளுப்புமாய்
கண்டபடி உருவெடுத்து

வயதான சுவடின்றி
அலைந்து திரிகின்ற

அதே மேகங்கள்
-----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

4 கருத்துகள்:

 1. பெயரில்லாசனி, ஜூலை 02, 2016

  வயதான சுவடின்றி
  அலைந்து திரிகின்ற.../// அருமை அது தானே எங்களிற்கு மட்டும் ஏன் வயதாகிறது....

  பதிலளிநீக்கு
 2. மேகங்கள் அதேதான்,நாம்தான் மாறிப்போனோம்,/

  பதிலளிநீக்கு
 3. சகோ விமலன் அவர்களின் வரிகளை வழி மொழிகின்றோம்

  பதிலளிநீக்கு