வெள்ளி, 8 ஏப்ரல், 2016

அமைதிப் பேச்சு

அமைதிப் பேச்சு
------------------------------
சொல்லுவதும் செய்வதும்
அவரவர் சுகத்திற்காய்

அள்ளுவதும் தள்ளுவதும்
மற்றவர் மனத்திற்காய்

எல்லாப் பேச்சுக்கும்
எதிர்ப் பேச்சு தேவையில்லை

எதிர்ப் பேச்சு பெரும்பாலும்
எதிரிப் பேச்சாகும்

ஆராய்ந்த மனத்திற்கு
அமைதியே பேச்சாகும்
-----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

7 கருத்துகள்:

 1. அருமையான வரிகள் நண்பரே...
  உண்மையான வரிகளும் கூட....

  பதிலளிநீக்கு
 2. அமைதியையே பேச்சாக்குவோம்
  அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 3. பேச்சில் அவையடக்கம் மிக மிக த் தேவை அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 4. மெளனமே சில சமயங்களில் சிறந்த பதிலாகும், அர்த்தமுள்ள கவிதை

  பதிலளிநீக்கு
 5. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

  பதிலளிநீக்கு