வியாழன், 24 மார்ச், 2016

மோட்டு வளை

மோட்டு வளை  
----------------------
மோட்டு வளையைப்
பார்த்துக் கிடந்தால்

உருவங்கள் மாறும்
காட்சிகள் தெரியலாம்

ஒன்றோ இரண்டோ
பூச்சிகள் ஓடலாம்

ஒட்டடை அடிக்கும்
ஞாபகம் வரலாம்

உறக்கமும் வந்து
கண்களை அமுக்கலாம்

மோட்டு வளையே
கனவிலும் வரலாம்

மோட்டு வளையைப்
பார்த்துக் கிடக்கலாம்
-------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

2 கருத்துகள்:

  1. அருமை! எப்படியோ மோட்டு வளையைப் பார்த்திருப்பவர்களின் தத்துவம் புரிந்தது

    பதிலளிநீக்கு