புதன், 9 டிசம்பர், 2015

கிராமமும் நகரமும்

கிராமமும் நகரமும்
----------------------------------
தரையிலே நடந்து போறப்போ
பள்ளம் வந்தா கிராமம்

பள்ளத்தைப் தாண்டிப் போறப்போ
தரை வந்தா நகரம்

கண்மாய் உடைஞ்சு போயி
வயலுக்கு வந்தா கிராமம்

ஏரி உடைஞ்சு போயி
வீட்டுக்கு வந்தா நகரம்

கிரமப் போக்கில் கிராமம்
நரகப் போக்கில் நகரம்
-------------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

5 கருத்துகள்:

 1. யதார்த்தமான உண்மை நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. நிதர்சனமான வரிகள் தற்கால நகரங்களின் அமைவிடங்களை அழகாய் சொல்லிய விதம் அருமை தொடர வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்

  உண்மையான கருத்து
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு