கான்பரன்ஸ் கலாட்டா
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த கான்பரன்ஸ் ங்கிறது
ஏதாவது ஒரு டெக்னாலஜி அல்லது
ப்ராசெஸ் சம்பந்தப்பட்ட மக்கள் , அவங்களுக்காக அவங்களை வச்சு அவங்களா
நடத்துற ஒரு விழாங்க. மக்களுக்காக
மக்களால் நடத்தப்படும் மக்களுடைய ஜனநாயகம் மாதிரி. இந்த கான்பரன்ஸ்
களோட அஜென்டாவை
எல்லாம் படிச்சுப்
பாத்தா ஒரு பேட்டர்ன் தெரியுதுங்க.
முதல்லே ஒரு வரவேற்புரை . அப்புறம்
ஒரு கீ நோட் பேச்சு.
அதாங்க முக்கியப் பேச்சாளர் பேச்சு. அப்புறம் விவாத
மேடை, கலந்துரையாடல் . கடைசியா நன்றி உரையுன்னு
முடியுது
இந்த வரவேற்புரையிலே சொல்லற
பேர் எல்லாம் மறுபடியும் நன்றி
உரையிலே ரிபீட் ஆகும். நாள் முழுக்க
பொறுமையா உட்கார்ந்து இருக்கிறவங்க பேரை ரெண்டு தடவை
சொல்லுறது சரிதானுங்க.
ஆனா இந்த கீ
நோட் பேச்சுன்னு கூப்பிடறது ஒரே ஒரு முக்கியப்
பேச்சாளரைத் தானே
கூப்பிடணும். இப்பல்லாம் மூணு நாலு பேரை
முக்கியப் பேச்சாளராய்க் கூப்பிடுறாங்க.
அவங்களுக் குள்ளே பிரச்சினை வந்துடக்
கூடாதுன்னு எல்லாரையும் முக்கியப் பேச்சாளராய் அறிவிச்சுடுறாங்க
போலிருக்கு. ஆனா அதுக்காக அந்தப்
பேச்சாளரை அறிமுகப்
படுத்துற மெம்பெரையும் ஏன் முக்கியப் பேச்சாளராய்ப் போடுறாங்களோ
அது மட்டும் புரிய மாட்டேங்குது . கொஞ்சம் ஓவராய்த் தெரியுது.
இதிலே இன்னொரு பிரச்சினை
என்னன்னா 'முக்கிய பேச்சாளர் பேச்சை
மட்டும் கேட்கலாம் , மத்த நேரம் தூங்கலாம்'
ன்னு வர்ற
ஆடியன்ஸ் சில பேருக்கு ரெம்ப
கஷ்டமாய் ஆயிடுது. நாள் முழுக்க முழிச்சுக்கிட்டு
இருக்க வேண்டியதாய் இருக்கு. ஒரு வேளை அதுக்காகத்தான்
ஆர்கனைசர்ஸ் இப்படிப் பண்ணுறாங்களோ என்னமோ.
அப்புறம் வர்ற விவாத மேடையிலே
' கோபாலா ஜாவா ' வான்னோ ' வாடெர்பாலா அஜைல்லா ' ன்னோ
டாபிக்கைக் கொடுத்துருவாங்க. அவங்க ஒவ்வொருத்தரும் இன்னொரு
டெக்னாலஜியை பிராசஸ்ஸை தாக்குற தாக்கைக் கேட்டதும் நமக்கு ரெண்டுமே வேணாம்,
வேற ஏதாவது புதுசா வந்து தொலைச்சா நல்லா
இருக்கும்னு தோணிரும். நம்ம பாக்கிற பிராஜெக்டிலே
இந்த டெக்னாலஜி இருந்தா அதிலே வேலை
பாக்கவே ஒரு மாதிரி வெறுப்பா
ஆயிடும்.
இந்த கலந்துரையாடல்னு ஒண்ணு
அதுக்குப் பிறகு ஆரம்பம் ஆகும்.
அதிலே கலந்துக்கிறவங்க அவங்களைப் பத்தியும் அவங்க கம்பனியைப் பத்தியும்
பெருமை அடிச்சுக்க ஒரு சந்தர்பம் கிடைக்கும்
அவங்களுக்கு. அதே மாதிரி நமக்கும்
ஹை டீ சாப்பிட வெளியே
போக ஒரு சந்தர்பம் கிடைக்கும்.
அங்கே என்னடான்னா ஹை
டீ ன்னு சொல்லி ஒரு
சின்ன பிஸ்கட்டையும் பாதி கப்பு டீயும்
கொடுப்பாங்க.
இந்த லஞ்ச் , டின்னெர்
எல்லாம் இந்த கான்பரன்ஸ் நடத்த
இடம் கொடுத்த ஹோட்டல் புண்ணியவான்கள்
அவங்க ரெஸ்டாரன்டிலே மீஞ்சு
போன சாப்பாட்டை
எல்லாம் தள்ளி விட நல்ல
ஒரு சந்தர்ப்பமாய் அமைஞ்சிருக்கும்.
ஒரு வழியா கான்பரன்ஸ்
முடியும். நம்மளும் அடாத மழையிலே ஆட்டோவே
கிடைக்காம நடந்தே, நீச்சல் அடிச்சே நடு
ராத்திரிக்கு வீடு வந்து சேருவோம்.
இந்த கான்பரன்ஸை நடத்தி
முடிக்க ராத்திரியும்
பகலுமா படாத பாடு பட்ட
வாலண்டியர்சும் நிம்மதி பெருமூச்சு விடுவாங்க.
-------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி
அருமைங்க...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅற்புத விளக்கம் கண்டேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-