தீபாவளி பர்சேஸ் - நகைச்சுவைக் கட்டுரை
-----------------------------------------------------------------------------------------------------
நமது கண்ணின் மணிகளாம்
பெண்மணிகளுக்கு தினசரி பர்சேஸ்
என்பது வழக்கமான வாடிக்கையாக இருந்தாலும் , தீபாவளி பர்சேஸ் என்பது
ஓர் திருவிழா பர்சேஸ் ஆகும். ஆனால்
கணவன்மார்களுக்கோ அது ஒரு தவிர்க்க
முடியாத தலைவலி நாள் ஆகும்.
மற்ற நாட்களில் ஏதாவது
காரணம் சொல்லி போகாமல் இருக்க முடிந்தாலும்
தீபாவளித் திருநாள் , குடும்பத் திருவிழா என்பதால் மறுக்க முடியாமல் மாட்டிக்
கொள்வார்கள். மனைவிமார்களும் வாராது வந்த வாய்ப்பை
நழுவ விடுவார்களா. பெருங் கூட்ட நடுவிலே
மணிக்கணக்காக கணவன்மார்களால் நிற்க முடியுமா என்பதை
சோதிக்கும் வாய்ப்பு அல்லவா.
மற்றும் வீட்டுப் பொருட்கள்
எல்லாம் பழசாகிப் போய் விட்டதாய் திடீர்
ஞானோதயமும் அப்போதுதான்
அவர்களுக்கு வரும். கூட்டி
வைத்த விலையிலே கொஞ்சூண்டு தள்ளுபடி செய்து அதிக விலைக்கு
அன்று மட்டுமே கிடைக்கும் மிக்சி
, கிரைண்டர் , பிரிட்ஜ் எல்லாம் வாங்கச் சொல்வார்கள்.
அதில் புதிய டெக்னாலஜி
எப்படி எல்லாம் இருக்கிறது என்று
கண்டுபிடிக்கும் பொறுப்பு கணவர்களை வந்தடையும். இவர்களும் ஏமாந்து போய் பொறுப்பாக
புரோச்சர் எல்லாம் படித்து டெஸ்ட்
செய்து பார்த்து , ரிமோட்டில் இயங்கும் காப்பி மேக்கரையும் சேர்த்து
வாங்குவார்கள். காலை நேர அவசரத்தில்
ரிமோட்டைத் தேடும் நேரம் அவர்களுக்கு
இருக்குமா என்று கூட யோசிக்காமல்.
இந்த திருப்தி மயக்கத்தில்
அவர்கள் இருக்கும் போதே பெண்மணிகள் அடுத்த
பிரம்மாஸ்திரத்தை எடுத்து விடுவார்கள்.
ஆமாம். சேலைகளும் நகைகளும் வாங்கிக் குவிக்க வேண்டிய நேரம்
வந்து விட்டது.
ஊரில் இருக்கின்ற அத்தனை
நகைக் கடைகளும் ஜவுளிக் கடைகளும் அன்றுதான்
பெண்மணிகளால் ஆண்மணிகளுக்கு அறிமுகம்
ஆகும். அந்த இடங்களில் அவர்கள் நிற்பதுவோ நடப்பதுவோ அமர்வதுவோ படுப்பதுவோ அந்தந்த இடங்களில் இருக்கும் சவுகரியத்தையும் அவர்களின் அசவுகரியத்தையும்
பொறுத்தது.
போனில் இருக்கும் லொகேஷன்
செர்விஸ் என்பது காலை உணவு,
மதிய உணவு, இரவு உணவு
முதலிய முக்கியத் தேவைகளுக்கு இருவரும் சேர்ந்து செல்ல உபயோகப்படுத்தப் படும்
. தொடர்ந்து சேலைக் கடைகளும் நகைக்
கடைகளும் பர்சேசுக்கு உபயோகப்படுத்தப் படும்.
பேங்க் பேலன்ஸ் தீரும்
வரை இது தொடரும். இரவும்
வந்து விடும். லாரியும் வந்து
விடும். இருவரையும் வாங்கிய பொருட்களோடு வீட்டுக்குக்
கொண்டு சேர்க்க. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
.
-----------------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி
வணக்கம்
பதிலளிநீக்குசொன்ன விதம் சிறப்பு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய வாழ்த்துகள்
நீக்குதீபாவளி படுத்தும்பாடு கணவர்களுக்கு ம்ஹிம் அம்புட்டு கஸ்டம் அருமை!
பதிலளிநீக்குதங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே!
இனிய வாழ்த்துகள்
நீக்குஅருமை
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள்
நீக்குதீபாவளிக்கு ஏற்ற கட்டுரை!
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள்
நீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குநகைச்சுவைக்காக எழுதினாலும் உண்மையைதான் எழுதி உள்ளீர்கள். தீபாவளிக்கென்றே எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை அருமை.
என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்துரைத்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
இனிய வாழ்த்துகள்
நீக்குஇன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
பதிலளிநீக்குஅன்புடன் இனிய வாழ்த்துகள்.!
இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.
இனிய வாழ்த்துகள்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇனிய தீப திருநாள் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
இனிய வாழ்த்துகள்
நீக்குஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
பதிலளிநீக்குநன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/
இனிய வாழ்த்துகள்
நீக்குஹஹஹ் செம .....தள்ளுபடி என்று சொல்லித் தள்ளு முள்ளுக்கிடையில் இடிபட்டு, அன்றைய சாப்பாடுச் செலவு, போக்குவரத்துச் செலவு என்றுகணக்கிட்டால் தள்ளுபடியை விட அதிகமாகவே இருக்கும் என்பதுதான் உண்மை..
பதிலளிநீக்கு