வெள்ளி, 6 நவம்பர், 2015

ஹாலிவுட்டும் கோலிவுட்டும் - நகைச்சுவைக் கட்டுரை

ஹாலிவுட்டும் கோலிவுட்டும் - நகைச்சுவைக் கட்டுரை
-------------------------------------------------------------------------------------------------------------------
சொல்றாங்க. உலகத்தின் பினான்சியல் கேபிடல் நியுயார்க்காம் . சாப்ட்வேர் கேபிடல் சான் பிரான்சிஸ்கோவாம். என்டர்டைன்மெண்ட் கேபிடல் லாஸ் ஏஞ்ஜெலசாம். நம்மளும் பேங்கிலே இருந்தாச்சுபுரோகிராம் எழுதியாச்சு . இப்ப என்டர்டைன்மெண்ட்டிலெ   எழுத்து  பேச்சுன்னு இறங்கியிருக்கோமே . லாஸ்ஏஞ்சலைசையும்  பாத்துட்டு வரலாம்னு போனா அந்த ஹாலிவுட் நம்ம கோலிவுட் அளவு இல்லைங்க.

பிரபல நடிகர் நடிகை பேரெல்லாம், அந்தக் கால பால் முனியிலே இருந்து இந்தக் கால பிரிட்னி ஸ்பியர்ஸ் வரைக்கும் நட்சத்திர டிசைனுக்கு நடுவிலே வச்சு கல்லிலே செதுக்கி ஹாலிவுட் தெருவிலே பெவ்மெண்ட்டிலெ  பதிச்சு வச்சு அவங்களுக்கு மரியாதை செலுத்துறாங்களாம்  . . என்னங்க. இதுநாம பெவ்மேன்ட்டிலே நடந்து போறப்போ   அவங்களுக்கு வலிக்காதா. நம்ம ஊரிலே எச்சி துப்பி குப்பை கொட்டி இன்னமும் அவமானப் படுத்தி இருப்பாங்கமரியாதை செலுத்திற லக்ஷணமாங்க இது. நம்மளைப் பாருங்க. நடிகர்கள் கட் அவுட் வச்சு குடம் குடமா பாலிலே அபிஷேகம் பண்ணுறோம். அது மட்டுமா , கோயிலே கட்டி கும்பாபிஷேகம் நடத்துறோம். அது அது மரியாதை.

அப்புறம் யுனிவேர்சல் ஸ்டூடியோவாம். அங்கே அந்தக்   காலப் படங்கள் சைக்கோ, ஜாஸ் ஸிலே இருந்து இந்தக் காலப் படங்கள் ஜுராசிக் பார்க் வரைக்கும் போட்ட செட்டை எல்லாம்  அழகா வச்சு அதுக்கு நடுவிலே அந்தப் படங்கள்லே   வர்ற    ஒண்ணு ரெண்டு      சீனை த்ரீ டி வடிவத்திலே காமிச்சு , ஸ்டூடியோ டூர் விடுறாங்க. நல்லாத் தான் இருக்கு. ஆனா இந்தக் காலத்துக்கு ஏத்த   மாதிரி   நம்ம பழைய ஸ்டூடியோ எல்லாம் தியேட்டர், மால் லுன்னு மாத்தி இருக்கோமே. அந்தப் பக்குவம் அவங்களுக்கு இல்லையே. என்ன பண்றது.

டிஸ்னி லேன்ட்டுன்னு ஒண்ணு இருக்குங்க. அங்கே ராத்திரிக்கு ராத்திரி வான வெளியிலே , கோட்டை கொத்தள  செட்டுக்கு மேல எலெக்ட்ரானிக்கு     வாண வேடிக்கை , லேசர் பொம்மை விளையாட்டுன்னு  அசத்துறாங்க. பூமியிலேயும் எலெக்ட்ரானிக் ஊர்வலம் டிஸ்னி பொம்மைகளை பெருசு பெருசா நடக்க வச்சு ஆட வச்சு பாட்டுப் போட்டு  ஆர்ப்பாட்டம் பண்றாங்க. என்னங்க. நம்மளோட ஒரு தீபாவளி போதாதா. தீப ஒளித் திருவிழாவா இருந்ததை வெடி ஒலி திருவிழாவா   மாத்தி   காதையும் காத்தையும் படுத்துறோமே  . அந்த மாதிரி முடியுமா. பெருசா சொல்லிக்கிறாங்க.

நல்ல வேளை ஞாபகம் வந்திருச்சுங்க. காசைக் கரியாக்கி காத்தைப் புகையாக்கிற பட்டாசுகளை வாங்கி வரச் சொல்லி பேரன் பேத்திக    சொல்லி அனுப்புனாங்க. கடைக்குப் போயி சீனப் பட்டாசை விலக்கி சிவகாசிப் பட்டாசை வாங்கணுங்க. வர்றேங்க.
---------------------------------------------------நாகேந்திர பாரதி


3 கருத்துகள்:

  1. //சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா..//
    என்றுதான் பாடத் தோன்றியது தங்களின் பதிவை படித்ததும்.

    பதிலளிநீக்கு