வியாழன், 5 நவம்பர், 2015

சாம்பார் சாதம்

சாம்பார் சாதம்
-------------------------
வேலை விஷயமாய்
வெளிநாடு போனவர்கள்

பர்கரும் பிஸ்ஸாவும்
பத்து நாட்கள்  சாப்பிட்டு

நாக்கு ருசியிழந்து
நாடு திரும்பிய நாள்

சாம்பார் சாதத்தைத்
சமைத்திருந்த அம்மாவுக்கு

எட்டு வேலி நிலமிருந்தால்
எழுதிக் கொடுப்பார்கள்
-----------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

9 கருத்துகள்:

 1. உண்மைதான்...அந்நியநாட்டு உணவு இரண்டுநாளுக்கு மேல் கசந்தே போகும்..தான்.

  பதிலளிநீக்கு
 2. ///சாம்பார் சாதத்தைத்
  சமைத்திருந்த அம்மாவுக்கு

  எட்டு வேலி நிலமிருந்தால்
  எழுதிக் கொடுப்பார்கள்///

  உண்மைதாங்க பருப்பு விலையை பார்க்கும் போது எட்டுவேலி என்ன எம்பது வேலி நிலமிருந்தால் கூட எழுதி கொடுத்துதான் ஆக வேண்டும்

  பதிலளிநீக்கு
 3. மிகச் சரியாகச் சொன்னீர்கள்! சாம்பார் சாதமென்ன, பழைய சோறுக்கே எட்டு வேலி நிலம் எழுதித்தரலாம்!!

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான்...எம்புட்டு நிலம் வேணாலும் எழுதிக் கொடுக்கலாம் அந்த நிலத்துல பருப்பு விளைய வைப்பாங்களா...

  பதிலளிநீக்கு