வெள்ளி, 6 நவம்பர், 2015

காலக் குருவி

காலக் குருவி
-----------------------
காலக் குருவியொன்று
காணாமல் போனது

திடீரென்று ஒரு நாள்
திரும்பி வந்தது

மெலிந்த மேனியோடும்
கலைந்த கனவுகளோடும்

அந்தக் குருவியா
இந்தக் குருவி

நேற்றை விட்டதால்
நாளை வந்தது
------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

3 கருத்துகள்: