வியாழன், 26 நவம்பர், 2015

வாகன வாழ்க்கை

வாகன வாழ்க்கை
---------------------------------------
வாக்கிங் போறது உடம்புக்கு நல்லது தாங்க. அதுக்காக பத்து கிலோ மீட்டெரிலே இருக்கிற ஆபீசுக்கு தினசரி  நடந்தே போறது அவ்வளவா நல்லது இல்லைங்க. இதை அனுபவிச்சு புரிஞ்ச பிறகுதான் சைக்கிள் வாங்கினேன்.

ஆனா இந்த சைக்கிள் சக்கரங்கள் நம்ம வெயிட்டைத் தாங்க முடியாம அடிக்கடி காத்து போயி, பஞ்சரா ஆகி ரெம்பவே படுத்துச்சுங்க .. பல சமயம், நானும் சைக்கிளும் சேர்ந்து ஆபிசுக்கு வாக்கிங் போக வேண்டியதாச்சு. முடியலே.

அதனாலே ஸ்கூட்டருக்கு மாறிட்டேன். உடனே திடீர்னு மனைவி குழந்தைகளுக்கு எல்லாம் ஊரிலே இருக்கிற மால்களுக்கு எல்லாம் அடிக்கடி போகணும்கிற ஞானோதயம் வந்துடுச்சுங்க. பெட்ரோல் செலவு, ரிப்பேர் செலவுன்னு கொஞ்ச நாள்லேயே ஸ்கூட்டர் விலையை விட தாண்டிப் போயிடுச்சுங்க.

சம்பளமும் கூடுச்சு., குழந்தைகள் எண்ணிக்கையும் கூடுச்சு. ஸ்கூட்டெரிலெ ஆறு பேரா உட்கார்ந்து போயி அபராதம் கட்டி கட்டி அலுத்துப் போச்சுங்க. என்ன பண்றது. நாலு சக்கர வண்டிக்கு மாறியாச்சு. ஆமாங்க. கார் வாங்கியாச்சு. காரோடு சேர்த்து டிரைவர் சம்பளம், டீசல் செலவு, வாஷிங் செலவுன்னு ஏகப்பட்ட செலவு சேர்ந்தாச்சு.

சொந்த ஊருக்குப் போறதுக்கு பஸ் ரெயிலிலே செகண்ட் ஏசி புக் பண்ணி போயிட்டு வந்தா அரை  மாச சம்பளம் அவுட்டுங்க. ஆபீசிலே ஒழுங்கா வேலை பார்த்து புரோமோஷன் எல்லாம் கிடைச்சதாலே ஒரு மாதிரி இந்த லைப் ஸ்டைல்லை சமாளிக்க முடிஞ்சுதுங்க. அப்புறம் என்ன, ஒரு நாள் அட்லாண்டிக் கடலைத் தாண்டி அமெரிக்காவுக்கே அனுப்பி வச்சுட்டாங்க. ஆச்சு . பிளைட்டிலேயும் போயாச்சு.  
  
பிளைட்டிலே அடிக்கடி போயிட்டு வரப்போ  தான் ஒரு விஷயம் புரிஞ்சுசுங்க. உலகம் எவ்வளவு சிறுசுன்னு. உலகம் மட்டும்   இல்லே   .பாத் ரூமும் எவ்வளவு சிறுசுன்னு. உடம்பை வளைச்சு நெளிச்சு எப்படி வாழ்க்கையிலே அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்கிற தத்துவமும் புரிஞ்சு போச்சுங்க.

இப்படியே காலம் ஓடுச்சுங்க  .   வயசாயிடுச்சு. வீட்டுக்குப் போகலாம்னு அனுப்பி வச்சிட்டாங்க. இந்த ரிட்டயர்டு ஆசாமிகளுக்குன்னே பக்கத்திலே ஏதாவது ஒரு பார்க் கட்டி வச்சிருக்காங்களா .அதுக்கு வாக்கிங் போக ஆரம்பிச்சுட்டேன். என்ன ஒண்ணு. பெரிய பார்க்கு ஒண்ணு ஒரு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலே இருக்கு. அதான் சைக்கிள் வாங்கலாம்னு யோசிக்கிட்டு இருக்கேன்.  என்ன சொல்றீங்க .
----------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


8 கருத்துகள்:

 1. வணக்கம்
  உண்மைதான் வாழ்க்கை ஒரு வட்டமே...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. கதை நல்லாத்தான் இருக்கு. எதுக்கும் ஒரு நல்ல ஜோசியர்கிட்ட போயி உங்களுக்கு வாகன யோகம், அப்புறம் வாகனத்தால ஏதாச்சும் கண்டம் இருக்குதான்னு பாத்துட்டு அப்புறம் வாகனம் வாங்குங்க.

  சைக்கிள் ஓட்டத் தெரியுமா? சின்ப்பையானா இருக்கறப்ப ஓட்டியிருப்பீங்க. ஆனா இப்ப கைகால் எல்லாம் ஒத்துழைக்குதான்னு பாத்துக்குங்க.

  பதிலளிநீக்கு
 3. ஐயா கூந்தல் உள்ளவன் அள்ளியும் முடியலாம் அவைத்தும் விடலாம்

  பதிலளிநீக்கு
 4. சாமியார் பூனை வளர்த்த கதைதான் முதலில் நினைவுக்கு வந்தது. சுவையான பதிவு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு