புதன், 25 நவம்பர், 2015

மழைக் கோலங்கள்

மழைக் கோலங்கள்  
----------------------------------------------------------------
மழைக் காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுக்குதுங்க.

நம்ம பள்ளிக்கூடம், கல்லூரிக் காலத்தை நினைச்சுப் பாருங்க. மழையிலே நனைஞ்சுக்கிட்டே போயி கல்லூரி காம்பௌண்ட் பிளாக் போர்டிலே ' தொடர் மழையால் தொடர்ந்து கல்லூரி லீவு ' என்ற மந்திர வாசகத்தைப் படித்து நம் மனம் அடைந்த சந்தோஷத்தை மறக்க முடியுமா. அப்படியே தொப்பலா நனைந்தபடி பக்கத்துக்கு தியேட்டரிலே போயி பார்த்த படத்தை தான் மறக்க முடியுமா.

ஆனா இப்பல்லாம் டிவியிலே ' மழை வந்தாலும் வரும்; வராமல் போனாலும் போகும் ' என்று தெளிவாக சொல்வதை வைத்து முன்கூட்டியே விடுமுறை அறிவித்து விடுகிறார்கள். பழைய சஸ்பென்ஸ் போயே போச்சு.,

அப்புறம் ஆபீஸ் போக ஆரம்பிச்ச உடன் நிலைமை மாறிடுச்சு . கொட்டும் மழையிலும் நீச்சல் அடிச்சாவது ஆபிஸ் போக வேண்டிய நிலைமைஎன்ன ஒரு சவுகரியம். எப்ப வேணும்னாலும் போகலாம். எப்ப வேணும்னாலும் திரும்பலாம். மூணு மணிக்குப் போயிட்டு நாலு மணிக்கு திரும்பிடலாம். அட்டெண்டன்ஸ் கொடுக்கணும். அவ்வளவுதான்.
          
சில பேர் வீட்டிலே இருந்து வேலை பாக்கிற ஆப்சனை உபயோகப் படுத்தலாமான்னு கேட்கிறாங்க. அய்யயோ வேணாங்க. அப்புறம் வீட்டுக்குள்ளேயே ராத்திரி பகலா வேலை பாத்துக்கிட்டே   இருக்க வேண்டியதுதான். மழையிலே வெளியேறி வாகனத்திலே ஊர்ந்து ஊர்ந்து போயி  ஆபிஸ் சேர்ந்து உடனே திரும்பி வர்ற அந்த ஒர்கிங் டே அனுபவம் வேண்டாமா. வேலைக்குப் போனாம். ஆனா வேலை பாக்க முடியலைங்கிறது  அயல் நாட்டிலே இருக்கிற கஸ்டமருக்கு   தெரிய வேண்டாமா.

ஆனா இந்த வயசானவங்க பாடுதான் ரெம்ப கஷ்டங்க. எல்லா வியாதிகளும் அப்படியே எந்திருச்சு அவங்களைப் படுக்க வச்சிருதுங்க. . இருமல், தும்மல்னு அவங்க படுற பாடு ரெம்ப மோசங்க.

அப்புறம், இந்த தாழ்வான இடங்கள்லே  வீடு கட்டுனவங்க பாடு ரெம்ப மோசம். முழங்கால் தண்ணியிலே அவங்க உட்கார்ந்து இருக்கிறதைப்       பாக்கிறப்போ ரெம்ப கஷ்டமா இருக்கு. குடிசை வீடுகள் எல்லாம் மழைக் காத்திலே பறந்து போயி அதுவரை போகாத ஸ்கூல்லே அந்த ஏழைங்க  போயி உட்கார்ந்து இருப்பதைப் பார்க்க ரெம்ப கஷ்டமா இருக்கு.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு அப்பவே சொல்லிட்டாங்க. மழைக்கும் அது பொருந்துங்கநம்ம தாகத்தையும் பசியையும் தீர்க்கிற  ' துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை ' இப்படி துப்புக் கேட்ட தனமா தண்ணீரைத் துப்பித் தொலைக்கிறது ரெம்ப துன்பங்க.
-------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


3 கருத்துகள்:

 1. //அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு அப்பவே சொல்லிட்டாங்க. மழைக்கும் அது பொருந்துங்க. நம்ம தாகத்தையும் பசியையும் தீர்க்கிற ' துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை ' இப்படி துப்புக் கேட்ட தனமா தண்ணீரைத் துப்பித் தொலைக்கிறது ரெம்ப துன்பங்க. //

  அருமை!

  பதிலளிநீக்கு
 2. சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...

  இணைப்பு : →அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!

  பதிலளிநீக்கு
 3. அந்தக் காலத்தில் மழையில் நனைவது சுகம்!
  இப்போது நனைந்தாலோ சுரம்!
  வயசாயிப் போச்சு!

  பதிலளிநீக்கு