செவ்வாய், 24 நவம்பர், 2015

மதுரை மண்

மதுரை மண்
----------------------
மடிச்சுக் கட்டிய வேட்டி
மல்லிப் பூவு மனசு

கடிச்சுப் போடுற கோபம்
கருத்த மேனித் தங்கம்

வெடிச்சுப் பேசுற பேச்சு
விருந்து வைக்கிற பிரியம்

முடிச்சுப் போட்ட வாழ்க்கை
முதலும் முடிவும் குடும்பம்

பிடிச்சுப் போகும் மதுரை
பிறந்து வளர்ந்து இருந்தா
----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

4 கருத்துகள்:

 1. முடிச்சுப் போட்ட வாழ்க்கை
  முதலும் முடிவும் குடும்பம்
  Mika nanru...
  Vetha.Langathilakam
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 2. //பிறந்து வளர்ந்து இருந்தா//
  இல்லாட்டாலும் பிடிக்கும் ஐயா பாரதி!i

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்

  அருமையாக சொல்லியுள்ளீர்கள் சிறப்பை.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு