ஞாயிறு, 15 நவம்பர், 2015

மழைக் கோலம்

மழைக் கோலம்
--------------------------
கண்மாய் நிரம்புது
கரைகள் உடையுது

வாய்க்கால் பொங்குது
வயலில் நிரம்புது

வளர்ந்த பயிர்கள்
அழுகிச் சாயுது

வளர்த்தவர்   கண்கள்
நிரம்பிப் பாயுது

காஞ்சும் கெடுக்குது
பேஞ்சும் கெடுக்குது
------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

7 கருத்துகள்:

 1. வடிகால்களை அகற்றி
  கான் கிரீட்காடுகளாக மற்றினோம் அல்லவா
  அதன் பயன்
  இன்று அனுபவிக்கிறோம்

  பதிலளிநீக்கு
 2. சோகமே மழையாகப் பொழிகிறது.
  ஏழையின் கண்களில் நீரும் வற்றுகிறது

  பதிலளிநீக்கு
 3. இயற்கை வர்ணிப்பு அழகு நண்பரே...

  பதிலளிநீக்கு
 4. நண்பரே பேஞ்சும் கெடுக்கவில்லை. நண்பர் கரந்தையார் சொல்லியிருப்பதுதான் இது....மழையினால் எந்தக் கெடுதலும் இல்லை...நாம் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யவில்லை. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சொன்னது போலத்தான்

  கவிதை அருமை..

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. ம்... உண்மை தான்...

  பதிலளிநீக்கு