வியாழன், 12 நவம்பர், 2015

செல்பி உலகம் - நகைச்சுவைக் கட்டுரை

செல்பி உலகம் - நகைச்சுவைக் கட்டுரை 
---------------------------------------------------------------------------------------------------
செல்பிங்கிறதும் செல்புங்கிறதும் ஒரு எழுத்து தான் வித்தியாசமா .  ஒரே மாதிரி தெரியுது. அதுவும் இந்த செல்பி ஸ்டிக் வந்தப்புறம் செல்பி ஸெல்ப் ஆயிடுத்து.     ஸெல்ப் செல்பி ஆயிடுத்து.

இந்த செல்பி ஸ்டிக் இல்லாத ஸ்கூல் நாட்கள்லே போட்டோ புடிக்க நாம பட்ட பாடு ஞாபகம் வர்றது . கேமரா மேனுக்காக பல மணி நேரம் காத்துக் கிடந்தது . அப்புறம் விரிஞ்ச உதட்டோட சியர்ஸ் சொல்லக் கஷ்டப் பட்டு பல மணி நேரம் கடந்தது. அப்புறம் ஒரு வழியா எல்லாரோடும் சேர்ந்து எடுத்த கருப்பு வெள்ளைப் புகைப்படம் இப்ப தூசி படிஞ்சு கிடக்கிறதுஇப்பல்லாம் எல்லா நண்பர்களோடும் டீச்செர்களோடும் ஸ்கூலோடும்     சேர்த்து செல்பி ஸ்டிக்கி லே ஒரே கிளிக்கிலே கலர்லே எடுத்து புடுவோம்லே .

அதுவும் இந்த செல்பி ஸ்டிக் பெருசா நீளமா ஆயிக்கிட்டே   வருதா    . ஒரு நாள் ரெம்ப நீளமாய்   ஆயி    சந்திரன் வரை நீண்டு பூமியிலே இருக்கிற அத்தனை ஜீவ ராசிகளோடும் நம்ம சேர்ந்து ஒரே பிரேமிலே அடக்கிடலாம் போலிருக்கு.    அது வரைக்கும் ஏதோ ஒரு நூறு பேரோட திருப்திப் பட்டுக்கிட வேண்டியது தான்என்ன ஒண்ணு. ஒரே புள்ளி புள்ளியாத் தெரியும். அதுக்குதான் மைக்ரோஸ்கோப்  இருக்கே. அதை வச்சுப் பார்த்து ஒவ்வொருத்தரா அடையாளம் கண்டுக்க வேண்டியதுதான்.

ஆனா ஒரே ஒரு சிரமமுங்க. நம்மளை மாதிரியே எல்லாரும் செல்பி ஸ்டிக் வச்சிருக்காங்க. பெர்சு பெருசா  . அது எல்லாம் நம்மளோட பிரைவசிக்குள்ளே  நுழையறது தான் கஷ்டமா இருக்கு. ஆகாயத்திலே பட்டத் திருவிழா மாதிரி, பூமியிலே செல்பி ஸ்டிக் திருவிழாவா இருக்கு. ஒண்ணோட ஒண்ணு  அடிச்சு புடிச்சுக்கிட்டு யார் ஜெயிக்கறதுன்னு ஒரு போட்டியே நடக்குது.

இந்த டெக்னாலஜி நம்மளை வேற ஒரு வெர்ச்சுவல் உலகத்திற்கே கூட்டிட்டு போகுது. சுத்தி இருக்கிற அழகான சீன்களை எல்லாம் ஆற அமர பாத்து ரசிக்கிறதை விட்டுப்புட்டு அவசர அவசரமா செல்பி எடுத்து பேஸ் புக் நண்பர்களோட  ஷேர் பண்ணிக்கிறது தான் ரெம்ப முக்கியமா போயிடுத்து. நம்ம எங்கே எங்கே போனோம்கிறதையே போட்டோ பாத்துதான் தெரிஞ்சுக்க வேண்டியதாய் இருக்கு.

போற போக்கைப் பார்த்தா   கொஞ்ச நாள்லே நம்ம விரல்லே செல்பி பட்டனைச் செதுக்கிட்டு , வெர்ச்சுவல் ஸ்டிக் , வெர்ச்சுவல் கிளவுட்டுன்னு இங்கே இருந்து அமுக்கினாலே வெர்ச்சுவல் கேமிராவோட கனெக்ட்     ஆகி உலகத்திலே இருக்கிற எல்லா இடங்கள்ளேயும் செல்பி எடுக்கலாம் போலிருக்கு.

அப்ப, வாசகர்களே, நம்ம எல்லாரும் இடம், தூரம் , காலம் எல்லாம் கடந்து சேர்ந்து செல்பி எடுத்துக்கலாம்அது வரைக்கும் ப்ளாக்கிலே   பேசிக்கலாம்..
------------------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


11 கருத்துகள்:

 1. நாம யாருன்னு தெரியறதுக்கு இனிமேல் செல்பி எடுத்துப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. விரைவில் நீங்கள் சொன்னது நடந்தாலும் நடக்கும்...

  பதிலளிநீக்கு
 3. செல்பி ஸ்டிக் இயற்கை அழகை, நம்ம அழகை, நம் மகிழ்ச்சியை மட்டும் எடுத்துக்கிட்டா பரவாயில்ல. அடுத்தவர் உடலையும், அந்தரங்கத்தையும் எடுத்து துக்கத்தையும் கொண்டு வந்துடுதே. அதான் வேதனை.

  பதிலளிநீக்கு
 4. அய்யா...பழனி.கந்தசாமி.. சொலவது மாதிரிதான் நடக்கும் போல....

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  தாங்கள் சொன்னது போல நிச்சயம் விரைவில் வரும்....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. Chinna suggestion. Microscope-i selfie la attach panni moon lerunthu padam edukkalam.

  பதிலளிநீக்கு
 7. ஹஹஹ்ஹ் சந்திரன் வரை நீண்டு செல்ஃபி ஸ்டிக் ...ஹஹ் அருமை...,ம்ம்ம் என்னத்த சொல்லுறது...செல்ஃபி ஸ்டிக்கால சண்டை போடாம இருந்தா சரி அந்தக்க்கால்த்துல வாள் சண்டை மாதிரி செல்ஃபிட் ஸ்டிக் சண்டை அப்படினு...

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்..நான் சக்தி. ஒரு தொடர் பதிவில் தங்களை இணைத்துள்ளேன் நன்றி..http://sakthiinnisai.blogspot.in/

  பதிலளிநீக்கு
 9. இதெல்லாம் விரைவில் நடந்தாலும் நடக்கும். செல்ஃபிக்காகச் செத்துப் போனவரைப் பற்றிக்கூட சமீபத்தில் படித்ததாக நினைவு.

  பதிலளிநீக்கு