செவ்வாய், 3 நவம்பர், 2015

குழந்தைகள் உலகம்

குழந்தைகள் உலகம்
-----------------------------------
கடலுக்குள் குதித்து
மீன்களுடன் நீந்தலாம்

காட்டுக்குள் புகுந்து
விலங்குகளுடன் விளையாடலாம்

கோட்டைக்குள் நுழைந்து
அரண்மனையில் ஆடலாம்

மிக்கி மின்னி வீட்டுக்கும்
விருந்தாளி ஆகலாம்

கார்ட்டூன்   உருவங்களின்
ஊர்வலத்தைப் பார்க்கலாம்

விண்ணுக்குள் ஒளி   வெள்ள  
விளையாட்டைப்   பார்க்கலாம்

குழந்தைகள் உலகம்
குதியாட்ட  உலகம்

பெரியவர்   உலகம்
பெருமூச்சு  உலகம்
-------------------------------------நாகேந்திர  பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

6 கருத்துகள்:

 1. கவிதை கதை சொன்னது நண்பரே நன்று

  பதிலளிநீக்கு
 2. குழந்தைகள் உலகம் கும்மாள உலகம்.
  இப்பொ தான் அரும்புகள் என்ற கவிதை

  தமிழ் தேர் - அமீரகத்திற்கு அனுப்பினேன்.
  பிரசுரமாக என் வலையில் போடுவேன்.

  பதிலளிநீக்கு
 3. அருமை நண்பரே! குழந்தைகள் உலகம் குதூகளம் நிறைந்தது!

  பதிலளிநீக்கு
 4. "குழந்தைகள் உலகம்"
  கவிதை மூலம் வைத்தீர்
  பேரின்ப திலகம்.
  அருமை!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 5. //பெரியவர் உலகம் பெருமூச்சு உலகம்// அருமை!

  பதிலளிநீக்கு