வியாழன், 15 அக்டோபர், 2015

'சென்' பிரான்சிஸ்கோ - நகைச்சுவைக் கட்டுரை

'சென்பிரான்சிஸ்கோ - நகைச்சுவைக் கட்டுரை 
---------------------------------------------------------------------------------------------------------
சான்பிரான்சிஸ்கோ   விலே இருக்கிற 'சான்'       எடுத்துட்டு சென்னையிலே இருக்கிற 'சென் போட்டு சென் பிரான்சிஸ்கோ ஆக்கிட்டேங்க. சென்னைக்கும் சான்பிரான்சிஸ்கோ வுக்கும் அவ்வளவு ஒற்றுமை இருக்குங்க.

தங்கம் கிடைக்குதுன்னு 'தங்க ஆசையிலே ' வந்த வெளி நாட்டுக்காரங்க ளாலே உருவானது தான் சான்பிரான்சிஸ்கோ வாம். சினிமாவிலே சேரணும்னு  'சினிமா ஆசையிலே' வந்த வெளி மாநிலம், வெளி மாவட்டக் காரங்களாலே உருவானது தானுங்களே நம்ம சென்னை.

தண்ணிக்கு மேல அங்கே கோல்டன் கேட்  ப்ரிட்ஜாம். நம்மளும் தரைக்கு மேல அண்ணா மேம்பாலம்  வச்சிருக்கொம்லே. அதுவும் ஒண்ணுக்குப் பத்தா பாலங்கள் இருக்குல்லே.

அப்புறம் மேட்டிலிருந்து பள்ளத்துக்கு வளைஞ்சு வளைஞ்சு ஊருக்குள்ளேயே லோம்பார்டு ரோடுன்னு ஒண்ணு இருக்காம்.   உலகத்திலேயே கார் ஓட்ட ரெம்ப கஷ்டமான ரோடாம். நம்ம சென்னை தெருவிலேயே குண்டும் குழியுமா இருக்குமே. அதிலே வளைஞ்சு வளைஞ்சு கார் ஓட்டுறது எவ்வளவு கஷ்டம்முன்னு    நமக்குத் தானே தெரியும். பெரிசா பெருமை அடிச்சுகிறாங்க

சைனா டவுன் ன்னு ஒரு ஏரியாவாம். அங்கே வித விதமான கலைப் பொருட்கள் கிடைக்குதாம். ஏங்க நான் தெரியாமதான் கேட்கிறேன். நம்ம ரங்கநாதன் தெருவிலே கிடைக்காத கலைப் பொருட்களாங்கஅப்புறம் பாண்டி பஜார் , சைனா பஜார் ன்னு எம்புட்டு இருக்கு.

வெளிநாட்டுக்காரங்க வந்து வச்சிருக்கிற வித வித மான ரெஸ்டா ரண்டாம். வித விதமான சாப்பாடாம்  .  நம்மகிட்டயும் தான் முருகன் இட்டிலி கடையிலே இருந்து முனியாண்டி விலாஸ் வரை வித விதமா இருக்கு. பேச வந்துட்டாங்க.

அப்புறம், அங்கே அடிக்கடி பூகம்பம் வருமாம். ஏங்க, இதெல்லாம் பெருமைக்கு உரிய விஷயமாங்க . சென்னையிலும் தான் இப்ப அடிக்கடி பூகம்பம் வருது. ஏன் சுனாமியே வந்துச்சே.  . ரெம்ப வருத்தத்துக்கு உரிய விஷயங்க. 'வி வில் ரீபில்ட்' ன்னு சொல்லிட்டு பில்டிங் எல்லாம் உயர உயரமா கட்டிறாங்க. போன உயிர் எல்லாம் திரும்ப வருமாங்க.

பணக்காரன் பிள்ளை பணக்காரன், ஏழை பிள்ளை ஏழைன்கிற மாதிரி அவங்க வசதிக்கு அவங்க உயரமா பில்டிங் கட்டுறாங்க. நம்மளும்தான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா ஈஸியார் ரோடு , எம் ஆர்  ரோடுன்னு கட்டிக்கிட்டு   இருக்கோம். என்ன கொஞ்சம் விளை நிலங்கள் எல்லாம் வீடாய் மாறுறது கஷ்டமாய்   இருக்கு.

     அப்புறம் சான் பிரான்சிஸ்கோ  ஐடி இன்னோவேஷன் சென்டராம்நான் தெரியாம தான் கேக்கிறேன். அங்கே இருக்கிற ஐடி கம்பனிகள்ளே வேலை பாக்கிற பயலுகள்ளே பாதிப் பயலுக யாரு. எல்லாம் நம்ம கிட்டே   இருந்து  போன பயலுவ தானே .

என்னமோ போங்க. இப்ப எனக்கு இந்த சான் பிரான்சிஸ்கோ செல்பி ஆல்பத்தை பேஸ் புக்கிலெ ஏத்தி பெருமை அடிச்சுக்கணும். வர்றேங்க.
-----------------------------------------------------------நாகேந்திர பாரதி7 கருத்துகள்:

 1. வணக்கம்
  அருமையாக உள்ளது இரசித்தேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. ஹஹஹரசித்தோம்

  கீதா: அட! சென்னைல ஈவ்னிங்க் பஜார், பூக்கடை பஜார் இருக்கேங்க பாரிஸ் கார்னர் அத விட்டுப்புட்டீங்களே..அஹஹ்

  சென்னை ரோட்டுல ஜாக்க்சானே கூட வண்டி ஓட்டக் கஷ்டப்படுவாருனு பெருமையா சொல்லிக்கலமே என்ன சொல்றீங்க..ஹஹஹ்


  பதிலளிநீக்கு
 3. எல்லாம் சரி ,அங்கே கூவம் இருக்கா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட ஆமாங்க . ஏதோ பசுபிக் விரிகுடா ஏரியா ன்னு தண்ணி கிடக்காம். நம்ம கூவம் மாதிரி வாசனை இல்லைங்க.

   நீக்கு