திங்கள், 7 செப்டம்பர், 2015

காதலுக்கு ஆயிரம் கண்கள் - நகைச்சுவைக் கட்டுரை

காதலுக்கு ஆயிரம் கண்கள் - நகைச்சுவைக் கட்டுரை

'காதலுக்குக் கண்ணில்லை ' ன்னு பழமொழி சொல்லுறாங்க. ஆனா 'காதலுக்கு ஆயிரம் கண்கள்' ங்கிறதுதான்  புது மொழியா ஆயிடிச்சு.

ஆண்கள் காதலியோட  பிகரைப் பாக்கிறாங்க. பெண்கள் ஆண்களோட சம்பள கவர்  பிகரைப் பாக்கிறாங்க. இது மட்டும் இல்லை. சாதி, மதம்,   வேலை எல்லாம் பாத்துதான் ரெண்டு பேருமே காதலிக்க ஆரம்பிக்கிறாங்க. கேட்டா காதலிலே தோல்வி அடையக் கூடாதுங்கிறாங்க   .

அப்புறம், இந்த காலேஜ் ஆபீஸ் இதிலே எல்லாம் பாத்தீங்கன்னா , பெண்ணைச் சுற்றி ஆண்கள் கூட்டம். ஆணைச் சுற்றி பெண்கள் கூட்டம். கேட்டா நட்புன்னு சொல்றாங்க. நட்புக்கும் காதலுக்கும் நடுவே ஒரு கோடுமெல்லிசா ஒரு கோடு. அவ்வளவுதான் . அதை தாண்டி இந்தப் பக்கம் வந்தா காதலாம். அந்தப் பக்கம் போனா நட்பாம்.

மாறி மாறி போயிக் கிறாங்க. வந்துக் கிறாங்க. அந்தக் காலச் சினிமாவிலே  கனவுக் காட்சி பாட்டிலேதான் இப்படி வரும். அப்புறம் முழிச்சுப் பாத்து ' தங்கச்சி, அண்ணா ' ன்னு வசனம் பேசுவாங்க. இப்ப  இங்கே நிஜமாவே நடக்குது. காதலுக்கு ஏகப் பட்ட கண்கள்  இருக்கிற மாதிரிதான் தெரியுது.

அப்புறம், இந்த தியேட்டருக்குப் போனா , முதல்லே போயி பாப் கார்ன் கியூவிலேதான் நிக்கிறாங்கபடம் போட்டாக் கூட பரவாயில்லை. அப்புறம் தான் புரிஞ்சது. பாப் கார்னை ஒரு பெரிய பக்கெட் மாதிரி டப்பாவிலே தர்றானுங்க. அதை வாங்கிட்டு மூஞ்சியை மூடிக்கிட்டு உள்ளே போறாங்க. அது என்ன முகமூடிக் காதலோ புரியலை.

பீச்சுக்குப் போனா, படகுக்குப் பின்னாலே போய் ஒளிஞ்சிகிறாங்க  .  சமோசா சுண்டல் வாங்கி வாங்கி சாப்பிட்டுக் கிட்டே இருக்காங்க. இந்த 'கடலை போடறதுன்னு ' சொல்றதை 'சுண்டல் போடுறதுன்னு' மாத்திப் புடலாம் போலிருக்கு. சுண்டல் விக்கற பசங்கள் எல்லாம் இப்ப கிரெடிட் கார்ட் மெசினோடுதான் வர்றாங்க. விசாவா மாஸ்டரா ன்னு கேக்கிறாங்க. ரெகுலரா வர்ற காதலர்களுக்கு டிஸ்கவுன்ட் எல்லாம் கொடுக்கிறாங்லாம்  . கேள்விதான்.


அப்புறம் இந்த பேஸ்புக் வேற இவங்களுக்கு ரெம்ப உதவி செய்றது. சில நேரம் உபத்திரமும் கொடுக்குது. என் நண்பன் ஒருத்தன் பேஸ்புக் கிலே இருக்கிற பொண்ணு படத்தைப் பாத்துட்டு காதலிக்க ஆரம்பிச்சுட்டான். அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டான்.      அந்த படம் ஒரு பாட்டியோட பழைய படம்னு . பாவம். பயந்து போயி பேஸ் புக் அக்கௌன்ட் குளோஸ் பண்ணிட்டுப் போயிட்டான்.

                சில பசங்க பரவாயில்லை. ரெம்ப விவரமா பேஸ்புக் விவரத்தை லிங்க்ட் இன் விவரம், ட்விட்டர் விவரம், கூகிள் விவரம் , வாட்ஸ் அப் விவரம் எல்லாத்தோடும் சரி பாத்துட்டுத் தான் காதல் பண்றாங்க. காதலுக்கு ஆயிரம் கண்கள்  இருக்குங்க.
-------------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

  

6 கருத்துகள்:

 1. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் தங்கள் தளத்திற்கு புதியவன்!
  நல்ல காதல் பகிர்வு நன்றி?!!
  அன்புடன் கரூர்பூபகீதன் !!

  பதிலளிநீக்கு
 3. பாட்டியோட படம் ஹஹஹஹஹ் அப்படித்தான் பாவம் பசங்க ஏமாறுறாங்க....ரசித்தோம்....தொடர்கின்றோம்...

  பதிலளிநீக்கு