சனி, 5 செப்டம்பர், 2015

கலர் மாறிய காலம் - நகைச்சுவைக் கட்டுரை

கலர் மாறிய காலம் - நகைச்சுவைக் கட்டுரை
-----------------------------------
ஜவுளிக் கடைக்கு மனைவி போறப்போ நம்ம கூடப் போறது சும்மா ஒரு துணைக்குத்தானே தவிர வேற எந்த உதவியும் செய்யறதுக்கு இல்லே ங்கிறது இவங்களுக்குப் புரியவே மாட்டேன்கிறது . அங்கே போய் ' இந்தக் கலரிலே இன்னொரு சேலை எடுங்க' ங்கிறாங்க . அந்த கடைக்காரர் ஒரு கூடை சேலையை நம்ம முன்னாலே கொட்டுறாரு.

நம்ம அதுக்குள்ளே கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடி ஒண்ணை எடுத்துக் கொடுத்தா ' ஏங்க, இது என்ன அதே கலரா , நான் சொன்னது இலைப் பச்சை . நீங்க எடுத்துகிறது கிளிப் பச்சை ' ங்கிறாங்க . ஏங்க, பச்சையிலே இலையா இருந்தா என்ன  கிளியா இருந்தா என்னங்க . அப்புறம் அவங்களா பாத்து அரக்குச் சிவப்பிலே ஒரு சேலையை எடுத்திகிட்டு இதுதான் நல்லா இருக்கு ம்பாங்க .

வீட்டுக்குத் திரும்புறப்போ நமக்கு வேறொரு கலர் டெஸ்ட் . 'ஏங்க , நான் வீட்டுக்குப் போறேன்சமையல் வேலை இருக்கு. நீங்க கடைக்கு போயி இந்த லிஸ்டில் இருக்கிற சாமானை எல்லாம் வாங்கிட்டு வந்திருங்க. '  ஜவுளிக் கடையிலே இருக்கிறப்போ இந்த சமையல் வேலை எல்லாம் ஞாபகமே இருக்காது. இப்பத்தான் திடீர்னு ஞாபகம் வந்திரும்.

நாம கடைக்குப் போயி லிஸ்டைப் பிரித்துப் பார்த்தா , அதிலே ஒரு பத்தொன்பது ஐட்டம் இருக்கும். சரிதான். அவங்க சமையலை முடிக்கிற வரைக்கும் , நமக்கு சரியான வேலை. ஒண்ணொண்ணா பாத்துப் பாத்து வாங்கிட்டு வீட்டுக்கு வந்தா அதிலே ஆயிரம் நொட்டை சொல்லுவாங்க. 'ஏங்க, நான் சோப்பு , கரு நீலப் பாக்கெட்டுன்னு போட்டிருக்கேன். நீங்க வெளிர் நீலத்தை தூக்கிட்டு வந்திருக்கீங்க. துவரம் பருப்பு ஆரஞ்சு பாக்கெட்டுன்னு போட்டிருக்கேன். நீங்க சிவப்புப் பாக்கெட்டை வாங்கியிருக்கீங்க. '

'அது சரி. லட்டு கூடவா கலர் தெரியாது. மஞ்சளுக்குப் பதிலா என்னவோ சிவப்பா எடுத்திருக்கீங்க .'நான் என்னங்க பண்றது. அந்தக் கடையிலே லட்டு பல கலர்லே இருந்திச்சு. பச்சைக் கலர்லே கூட இருந்துச்சு . அதை எடுத்திட்டு வந்திருந்தா , நம்ம கதி அதோகதி தான்.

நமக்குக் கலர் பாக்கத் தெரியாதாம். அந்தக் காலத்திலே நம்ம பாக்காத கலராபஸ் ஸ்டாண்டிலே, ஆபீசிலே  எத்தனை கலர் பாத்திருப்போம். அதை எல்லாம் இப்பச் சொன்னா கலவரம்தான்பேசாம டிவியைப் போட்டு கருப்பு வெள்ளைப் படம் பாக்க வேண்டியதுதான் .

---------------------------------------------------------நாகேந்திர பாரதி

4 கருத்துகள்:

  1. //நமக்குக் கலர் பாக்கத் தெரியாதாம்.//
    உங்க விஷயத்தில் அது சரியாகத்தான் போலிருக்கிறது அதனாலதான் அந்த காலத்தில் நான் பார்க்காத கலரா என்று சொல்லி இருக்கிறீங்க. அதுக்கு பதிலாக நான் சாகிறவரைக்கும் கலர் பார்க்கிறா ஆள்கிட்டயா என்று வந்திருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. ஆத்தாடி!!! இந்த பழைய கதையை அண்ணி படிச்சுடபோறாங்க!!! பாத்து கெவனமா இருங்க அண்ணா! பின்ன சேதாரத்துக்கு எங்கள மாதிரி readers பொறுப்பில்ல. சொல்லிபுட்டேன்:))

    பதிலளிநீக்கு