சனி, 12 செப்டம்பர், 2015

ஒரு கவிஞனின் புலம்பல் - நகைச்சுவைக் கட்டுரை

ஒரு கவிஞனின் புலம்பல் - நகைச்சுவைக் கட்டுரை
-----------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு ஒரு பெரிய கவிஞன்னு நினைப்புங்க. ஆனா மத்தவங்க   அந்த மாதிரி நினைக்கிற மாதிரி தெரியலீங்க. இப்ப உதாரணத்துக்கு பேஸ்புகிலே  எனக்கு நூத்துக்கு மேலே நண்பர்கள் இருக்காங்க. ஆனா என் கவிதைக்கு ஒரு லைக் கூட போட மாட்டேங்கிறாங்க. என்னோட ஒரே ஒரு லைக் தாங்க, அப்புறம் என்னாச்சுன்ன ரெண்டு லைக் கிடைக்க ஆரம்பிச்சுடுது. எப்படின்னா   வேற ஒண்ணும் இல்லைங்க. என்னோட ஒய்ப்போட பாஸ் வேர்டை வாங்கி நானே அந்த இன்னொரு லைகையும்   போட்டுட்டேன்

ஏங்க நான் எழுதுற கவிதை அவ்வளவு மோசமாங்க இருக்கு.  இப்ப இந்த கவிதையை எடுத்துக்குங்க. கம்ப்யூட்டர் உலகைப் பத்திய கவிதை.
'பிசினெஸ் அனலிஸ்ட் அனலிஸ் பண்றான் ; டெக்னிகல் ஆர்கிடெக்ட் டிசைன் பண்றான் ; புராஜெக்ட் மேனேஜர் மேனேஜ் பண்றான் ; சேல்ஸ் டைரக்டர்  சேல்ஸ் பண்றான். கஸ்டமர் என்னமோ ரிஜெக்ட் பண்றான்; ' அப்படின்னு ஒரு கவிதைங்க.

சாப்ட் வேர் உலகத்திலே நடக்கிறதை அப்படியே ' நச்' சுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா . ஆனா என்னமோ தெரியலீங்க அந்த கஸ்டமர் மாதிரி எல்லாரும் என் கவிதையை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.

சரி, இந்த மாதிரி பெரிய லெவல் கவிதை எல்லாம் மக்களுக்கு புரிய மாட்டேங்குதுவேற மாதிரி எழுதலாம்னு இந்த வழக்கமான கவிஞர்கள் வள்ளுவர் , இளங்கோ , பாரதியார் மாதிரி ஒரு சமுதாயக் கவிதை எழுதினேங்க.
உங்க எல்லோருக்கும் புடிச்ச சப்ஜெக்ட்தான். 'கா' விலே ஆரம்பிச்சு 'ல்' லே முடியுமே . நடுவிலே கூட இந்த '  த ' வருமே. கரெக்டாக் கண்டு பிடுச்சிட்டீங்க.   ஆமா. காதல் கவிதை.
  
காதல் கவிதை எழுத ஒண்ணு நாம காதல்லே தோல்வி அடைஞ்சிருக்கணும். இல்லே காதல்லே தோல்வி அடைஞ்ச மாதிரி நடிக்க வாவது தெரிஞ்சுருக்கணும். நம்ம ரெண்டும் இல்லேங்க. காதல்லே வெற்றி அடைஞ்சு என்னோட சொந்த மனைவியையே கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். சரியாச் சொல்லணுமா இல்லையா .

என்னமோ நானும் முயற்சி செஞ்சு ஒரு காதல் கவிதை எழுதிட்டேங்க. ரெம்ப உணர்ச்சிகரமான கவிதைங்க. கவனமாக் கேளுங்க. ரெண்டே வரிகள்தான். ஆனா பயங்கர மீனிங்நம்ம திருக்குறள் மாதிரிகேட்டதும் ரெம்ப உணர்ச்சி வசப் பட்டுராதிங்க.

முதல் வரி;
'அவன்                            அவளைக்                           காதலித்தான் '
நான் விளக்கிச் சொல்றேங்க. அவன் வேற யாரையும் காதலிக்கலை. அவளைத்தான் காதலிச்சான். வேற ஒண்ணும் செய்யலை. காதலிச்சான். அவ்வளவுதான். என்னங்க. உணர்ச்சி தாங்க முடியலை யா
அடுத்த வரி. அதை விட கனமானது.
' அவள்                                  அவனைக்                      . காதலித்தாள்'.
 விளக்கம் சொல்றேன்இது ஒன் சைடு காதல் இல்லேங்க. அவளும் அவனைக் காதலித்தாள். அவனை வெறுக்கலை . காதலித்தாள் . இருதலைக் காதல் .
இப்போ கவிதை முழுசும் விளக்காமப் புரிஞ்சுதா. எப்படி நம்ம தெய்வீகக் காதல் கவிதை.

ஆனா என்னமோ தெரியலீங்க. இதைப் படிச்சுட்டு என்னோட மனைவி அவளோட பாஸ் வோர்டை மாத்திட்டா. எனக்கு கிடைச்சது என்னோட ஒரே ஒரு லைக் தானுங்க.
----------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


5 கருத்துகள்: