புதன், 12 ஆகஸ்ட், 2015

தவளைக்கும் மீனுக்கும் தண்ணீ - நகைச்சுவைக் கட்டுரை


தவளைக்கும் மீனுக்கும் தண்ணீ  - நகைச்சுவைக் கட்டுரை
----------------------------------------------------------------------------------------------

மீன்களே நீந்துறப்போ நம்ம நீந்தக் கூடாதா?  மீனுக்கு இல்லாத கையும் காலும் வேற  நமக்கு இருக்கு . நான் முடிவு செஞ்சுட்டேன். எப்படியும் நீச்சல் கத்துக்கணும்னு .

நீச்சல் குளத்திலே தண்ணியிலே இறங்குறப்போ கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு .ஜில்லுன்னு வேற இருந்துச்சா . ஆனா ஆழம் அஞ்சு அடிதான், காலை நல்லா தரையிலே ஊண்டிக்கிட்டு தலை மட்டும் தண்ணிக்கு மேலே நீட்டிக்கிட்டு   நின்னேன்..

முதல்லே கையாலே தண்ணியை இப்படியும் அப்படியும் அடிச்சேன். ரெம்பவும் ஈசியாதான்  இருந்துச்சு .முன்னாடி நீட்டி, பக்கவாட்டிலே திருப்பி ,பின்னாலே இழுத்து கை நீச்சல் பயிற்சி நல்லாவே இருந்துச்சு .

இப்ப காலைத் தூக்கணும். இங்கேதான் பிரச்சினையே ஆரம்பம் ஆச்சு. ஒத்தைக் காலைத் தூக்கினேன். ஓகே . ரெண்டு காலையும் தூக்கினா, திருப்பி பொத்துன்னு கீழே விழ வேண்டியதாய் ஆயிருச்சு . காலைத் தரையிலே நல்லா அமுக்கி நிண்டுக்கிட்டேன் .

கொஞ்ச நேரம் யோசிச்சேன் . கையாலே நீச்சல் குள ஓரக் கம்பியைப் பிடிச்சிகிட்டு கால்களை மெதுவா உயரே தூக்கினேன். கொஞ்ச நேரம் தான். மறுபடி பொத்துன்னு தண்ணிக்குள்ளே முழங்கால் தரையைத் தொட , தலை வேற லேசா  தண்ணிக்குள்ளேயே முங்க, மூச்சைப் பிடிச்சுக்கிட்டு எழும்பி மேலே வந்துட்டேன்.

காலுக்கே இந்தக் கதின்னா நம்ம பெரிய உடம்பை எப்படி தூக்கிறது . அப்பத்தானே இந்த மூலையில் இருந்து அந்த மூலை வரை நீச்சல் அடிச்சுப் போகலாம்.

ஒரு யோசனை. வெறுமனே தண்ணிக் குள்ளேயே  நடந்து இந்த மூலையில் இருந்து அந்த மூலை வரை போனேன். அஞ்சு அடி ஆழம் தானே .  பாதி நீச்சல் அடித்த படு திருப்தி.

அவனவன் என்னென்னமோ நீச்சல் அடிக்கிறான். கடப்பாரை நீச்சலாம். முங்கு நீச்சலாம், கவுந்த நீச்சலாம், குப்புற நீச்சலாம் .

ம்ஹூம் இதெல்லாம் நமக்கு ஒத்து வராது . நீச்சலை குறைச்ச அறிவுள்ள மீன்கள் கிட்டேயும் தவளைகள் கிட்டேயும் விட்டுடலாம் . நமக்கு ஆறறிவு இருக்கு.  அகலமான ரோடு இருக்கு, நீச்சல் குளத்தை விட்டு வெளியேறி குளத்தைச் சுற்றி  ஆறேழு தடவை வேகமா நடந்திட்டு வீட்டுக்கு பாதுகாப்பா வந்து சேர்ந்தேன். 

------------------------------------------------------------
http://www.businesspoemsbynagendra.com 

2 கருத்துகள்:

 1. எனக்கும் நீச்சல் வராது.

  மீன்குஞ்சிற்கு நீச்சல் கற்றுத்தர வேண்டியதில்லை என்பார்கள்.

  நான் மீன்குஞ்சு இல்லை என்று யாரும் நீச்சல் கற்றுத் தரவில்லைபோல...!

  ஹ ஹ ஹா

  நகைச்சுவை பாணியில் அசத்துகிறீர்கள்.

  தொடர்கிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு