சனி, 13 ஜூன், 2015

இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம்
---------------------------------
வரப்புத் தகராறில்
வளர்ந்த சண்டையால்

வடக்குத் தெருவுக்கும்
தெக்குத் தெருவுக்கும்

வரத்தும் இல்லை
பேச்சும் இல்லை

மூணு நாட்களாய்
பெய்த மழையில்

கண்மாய் உடைந்தது
கைகள் சேர்ந்தன
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

2 கருத்துகள்:

  1. சிந்திக்க வைத்த கவிதை மனித ஒற்றுமைக்கு இயற்கை அளிக்கும் வைத்தியம் தேவைதான் .

    பதிலளிநீக்கு