சனி, 7 மார்ச், 2015

மனம் மறையும் நேரம்

மனம் மறையும்  நேரம் 
--------------------------------------------------
இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் 
இடைப்பட்ட நேரம் 

அமைதிக்கும் சப்தத்துக்கும்
இடைப்பட்ட நேரம் 

மனத்தாலே மனத்தை 
மயக்குகின்ற நேரம் 

இருட்டான அமைதியாய் 
அமைதியான இருட்டாய் 

மனத்துக்குள் மனம் 
மறைகின்ற நேரம் 
----------------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக