ஞாயிறு, 8 மார்ச், 2015

உள்ளே வெளியே

உள்ளே வெளியே 
-----------------------------
சும்மா இருக்கின்ற 
சுகத்தைக் காண்பதற்கும் 

எல்லாம் ஒன்றென்ற 
இயல்பைக் காண்பதற்கும் 

காலமும் தூரமும் 
கலக்கக் காண்பதற்கும் 

உடலும் உயிரும் 
உருகக் காண்பதற்கும் 

வெளியே இருந்து 
உள்ளே வர வேண்டும் 
------------------------------நாகேந்திர பாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக