ஞாயிறு, 8 மார்ச், 2015

வயதான கேள்வி

வயதான கேள்வி 
----------------------------
வருடத்துக்கு ஒருமுறைதான் 
வந்துவிட்டுப் போவான் 

இரண்டே நாட்கள்தான் 
இருந்துவிட்டுப் போவான் 

வளர்த்துவிட்ட பேரனை 
வாஞ்சையுடன் பார்த்தபடி 

கலங்குகின்ற பாட்டியின் 
கண்களுக்குள் கேள்வியொன்று 

வாய்க்கரிசி போடுதற்கு 
வருவானா மாட்டானா 
-------------------------------நாகேந்திர பாரதி 

3 கருத்துகள்: