புதன், 4 மார்ச், 2015

காபி விற்றவன்

காபி விற்றவன்
-------------------------------------------------
கட்டையாய்க் குட்டையாய்
வெள்ளைத் தாடியோடு 

தோளில் பையோடு 
சாய்ந்த நடையோடு 

பஸ்ஸின் படிகளில் 
தொற்றிக் கொண்டவன் 

எங்கேயோ எப்போதோ 
பார்த்த ஞாபகம் 

ஆபீஸ் கேண்டீனில் 
காபி விற்றவனா
-----------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து: