வியாழன், 5 மார்ச், 2015

வானம் பாத்த பூமி

வானம் பாத்த பூமி 
--------------------------------
ரோட்டோர முனுசாமிக்கு 
சிதறு காய் உடைச்சாச்சு 

கம்மாக்கரை சடச்சிக்கு 
பொங்கல்  படைச்சாச்சு

முளைக்கட்டு திருவிழாவில் 
மொளப்பாரி தூக்கியாச்சு 

அடுத்த ஊரு சாமிக்கு 
அலகு குத்தி நடந்தாச்சு 

வானம் பாத்த பூமியாக
வறண்டு கிடந்தாச்சு 
----------------------------நாகேந்திர பாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக