வியாழன், 11 டிசம்பர், 2014

காதல் வளர்ச்சி

காதல் வளர்ச்சி 
-------------------------
கண்களின் ஆர்வத்தில் 
ஆரம்பிக்கும் காதல் 

சொற்களின் சுவையில் 
சொக்கித் திளைத்து 

விரல்களின் விளையாட்டில் 
வெட்கிக் கலந்து 

உடல்களின் உணர்ச்சியில் 
ஒன்றிக் களைத்து 

உயிர்களின் ஒற்றுமை 
உணர்ந்து வளரும் 
------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

3 கருத்துகள்:

 1. வணக்கம்
  அழகிய வரிகள் கண்டு மகிழ்ந்தேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. திருமணம் தன்னை
  தேடிக் கொண்டே
  ஒருமனப் படுதல்
  உயர்ந்தாம் நன்றே!

  பதிலளிநீக்கு