செவ்வாய், 25 நவம்பர், 2014

காதல் பொறுப்பு

காதல் பொறுப்பு 
---------------------------
காதல் என்பது 
வெறும் விருப்பம் அல்ல 
பெரும் பொறுப்பு 

பேசும் நேரம் எல்லாம் 
பிரியம் இழைய வேண்டும் 

தனிமை கேட்கும் போது 
தள்ளி நிற்க வேண்டும் 

கண்ணீர் வடியும் போது 
கன்னம் துடைக்க வேண்டும் 

உள்ளம் சொல்லுவதை 
உடனே அறிய வேண்டும் 

சொல்லில் மட்டும் அல்ல 
செயலில் காதல் வேண்டும் 
------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. சொல்லில் மட்டும் அல்ல.
    செயலில் காதல் வேண்டும்..... ஆஹா அருமை.

    பதிலளிநீக்கு