சனி, 21 ஜூன், 2014

கிராமக் கருப்பு

கிராமக் கருப்பு 
------------------------
கருப்பு நூல்களும் 
கருகுமணி மாலைகளும் 

தொட்டில் வேண்டுதல்களும் 
தொங்கும் மரத்தடியில் 

நட்டு வைத்த சூலங்களின் 
நடுவே முளைத்திருக்கும் 

கிராமக் கருப்பின் 
குங்குமப் பார்வைக்கு 

சூறைத் தேங்காயும் 
மாலையும் போதும் 
--------------------------நாகேந்திர பாரதி 

1 கருத்து:

 1. வணக்கம்
  ஆகா...ஆகா... என்ன கற்பனை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு