திங்கள், 6 மே, 2013

இப்பவே வாரீகளா

இப்பவே வாரீகளா




----------------------------------



ஒப்படிக்கும் வயலடிக்கும்



ஓடி ஓடி வேலை செஞ்சு



நெல்லடிச்சுக் குமிச்சு வச்ச



நேரமெல்லாம் போயாச்சு



வயக்காட்டுச் சகதியிலே



வழுக்காம குடமிரண்டை



இடுப்பிலேயும் தலையிலேயும்



ஏத்தி வந்து ஓஞ்சாஞ்சு



முந்தா நாள் நடக்கையிலே



முடியாம விழுந்ததிலே



மூச்சு படபடத்து



முன் நாக்கு தள்ளுதடி



இப்பவே வாரீகளா



எழவுக்கு வாரீகளா



---------------------------------------நாகேந்திர பாரதி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக