செவ்வாய், 21 மே, 2013

அறிவுப் பல் அவஸ்தை

அறிவுப் பல் அவஸ்தை




---------------------------------------



மரத்துப் போ என்றாலும்



வலி யொன்றும் மறையாது



கடமுடா சத்தம்



காதில் குறையாது



வாயைக் கிழிப்பது போல்



வஸ்துக்கள் வேலை செய்யும்



பக்கத்துப் பல்லெல்லாம்



பார்த்துப் பரபரக்கும்



ரத்தத்தில் முக்குளித்து



சொத்தைப் பல் நஷ்டம்தான்



அறிவு அகங்காரம்



ஆனாலே கஷ்டம்தான்



--------------------------------------நாகேந்திர பாரதி






2 கருத்துகள்:

  1. /// அறிவு அகங்காரம்
    ஆனாலே கஷ்டம்தான் ///

    அருமை... உண்மை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு