மாறிப் போனவர்கள்
-------------------------------------
ஒடிஞ்சு ஒடிஞ்சு நடக்கறவ
ஊர்வசியாத் தான் இருக்கும்
நெடு நெடுன்னு வளந்தவ
ஓட்டப் பந்தயம் ஜெயிச்சவ
தொந்தியும் தொப்பையுமா
தொஞ்சு நடக்கிறவன்
தம்பித்துரையாத் தான் இருக்கும்
அப்பவே ஆளு
கொஞ்சம் குண்டுதான்
ஊருக்குத் திரும்ப
மண்டபத்தில் இருக்கிறப்போ
டீக்கடைக் குள்ளிருந்து
குரலு கேட்குது
கருகருன்னு முடியோட
திரிஞ்ச கதிரேசனா
பஞ்சுப் பொதியாகிப்
பரதேசியாத் தெரியிறானே
நம்மளைத்தான் சொல்றாய்ங்க
நமக்குத் தெரியாதவய்ங்க
-------------------------------------------------நாகேந்திர பாரதி
-------------------------------------
ஒடிஞ்சு ஒடிஞ்சு நடக்கறவ
ஊர்வசியாத் தான் இருக்கும்
நெடு நெடுன்னு வளந்தவ
ஓட்டப் பந்தயம் ஜெயிச்சவ
தொந்தியும் தொப்பையுமா
தொஞ்சு நடக்கிறவன்
தம்பித்துரையாத் தான் இருக்கும்
அப்பவே ஆளு
கொஞ்சம் குண்டுதான்
ஊருக்குத் திரும்ப
மண்டபத்தில் இருக்கிறப்போ
டீக்கடைக் குள்ளிருந்து
குரலு கேட்குது
கருகருன்னு முடியோட
திரிஞ்ச கதிரேசனா
பஞ்சுப் பொதியாகிப்
பரதேசியாத் தெரியிறானே
நம்மளைத்தான் சொல்றாய்ங்க
நமக்குத் தெரியாதவய்ங்க
-------------------------------------------------நாகேந்திர பாரதி
அது தெரியாமப் போச்சே...!
பதிலளிநீக்குஹா ஹா சூப்பர்
பதிலளிநீக்கு