வியாழன், 15 நவம்பர், 2012

நில் கவனி பேசு - 5

நில் கவனி பேசு - 5




---------------------------------------



'சொன்ன பேச்சைக்



கேக்கிறதில்லை யாரும்'



அலுத்துக் கொண்டார் பரமசிவம்



நண்பர்களிடம் பார்க்கில்



'கத்தரிக்காய்ச் சாம்பார் கேட்டால்



வெண்டிக்காய்ச் சாம்பார் வைக்கிறாள் மனைவி



என்ஜினீயரிங் படிக்கச் சொன்னால்



டாக்டருக்குப் படிக்கிறான் பையன்



பாட்டுக் கிளாஸ் போகச் சொன்னால்



டான்ஸ் கிளாஸ் போகிறாள் பெண்'



வீட்டுக்குத் திரும்பியதும்



மனைவியின் வசவு



'துவரம் பருப்பு வாங்கி வரச் சொன்னால்



உளுந்தம் பருப்பை வாங்கி வந்திருக்கீங்க'



-------------------------------------------------நாகேந்திர பாரதி




3 கருத்துகள்:

  1. தன்னுடைய பேச்சை தானே கேட்க மாட்டாரோ...! (விஜய் ரசிகர்....?)

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை
    கவிதையை முடித்த விதமும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு