ஞாயிறு, 15 மே, 2011

கிராம அத்தியாயம்

கிராம அத்தியாயம்
------------------------------
கருவக் காட்டிலே
காத்தாட இருந்திட்டு
கம்மாத்   தண்ணியிலே
கழுவிக்   குளிச்சுட்டு
குத்தாலத் துண்டைக்
கும்மித் துவட்டிட்டு
குளுந்த பழையதை
குடிச்சுப் போட்டுட்டு
வயக்   காட்டுலே
வளைஞ்சு ஒழச்சிட்டு
மிச்சப் பழையதும்
மிளகாயும் கடிச்சுட்டு
வெயிலும் வேலையும்
வேர்வை ஆக்கிட்டு
களப்புப் போக
குளிச்சு முடிச்சுட்டு
மனைவி மக்களை
கொஞ்சிக் கிடந்திட்டு
மீனும் சோறும்
மென்னு தின்னுட்டு
படுத்துப் புரண்டா
பட்டுன்னு தூக்கம்
-------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பது போல கிராமத்தின் அருமை நகரங்களின் நரக வாழ்க்கையில்தான் தெரியும் .கிராமத்தில் வாழ்பவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான் .கவிதை மிக மிக அருமை !

    பதிலளிநீக்கு