புதன், 23 பிப்ரவரி, 2011

சின்னப் பூந்தோட்டம்

சின்னப் பூந்தோட்டம்
--------------------------------
செல்லப் பொண்ணு பெத்த
சின்னப் பூந் தோட்டம்
சிரிச்சா  செடியாட்டம்
சிணுங்கினா கொடியாட்டம் 
தூக்கிகிட்டு   திரிஞ்சா
துள்ளும் கொண்டாட்டம்
கீழே விட்டுட்டா
கிளம்பும் திண்டாட்டம்
அழுதா ஆர்ப்பாட்டம்
அமைதி அம்மாவாட்டம்
-------------------------------------நாகேந்திர பாரதி  

2 கருத்துகள்:

  1. எளிமையான தமிழில் அழகான கவிதை... இதையும் படித்து பார்க்கவும்..
    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html

    பதிலளிநீக்கு