மனைவி தாசன்
-------------------------
அகமும் புறமும்
அறிந்த காரணத்தால்
அடுப்படி காதல்படி
அழகாய்ப் படிப்பதால்
வரும்படிக் குள்ளே
வாழ்க்கை நடத்துவதால்
உறவின் நட்பின்
ஒற்றுமை காப்பதால்
அழுதால் அழுது
சிரித்தால் சிரிப்பதால்
மனைவியின் தாசனாய்
இருப்பதில் மகிழ்ச்சியே
-----------------------------------------------------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக