சனி, 10 ஜூலை, 2010

காணாமல் போன கடைகள்

காணாமல் போன கடைகள்
------------------------------------------------
அங்கங்கே டப்பாக்கள்
சாக்குப்பை திறக்கப்பட்டு
உள்ளிருந்து எடுத்திட்ட
உளுந்து, புளி, மிளகாயை
உருண்டாயும் கூம்பாயும்
உருவாக்கும் பேப்பரிலே
தொங்கும் சணல் பந்தின்
நூலுருவிக் கட்டுகின்ற
காட்சி போனதிப்போ
கண்காட்சி ஆனதிப்போ
-----------------------------------------------நாகேந்திர பாரதி

2 கருத்துகள்:

  1. வண்ணநிலவனின் கம்பாநதி நாவலில் ஒரு பெட்டிக்கடை வரும் அதன் உரிமையாளரும், அவரது கிண்டலும் அங்கு கூடும் மக்களும் மிகவும் ரசிக்கும்படியாக வர்ணித்து இருப்பார். உங்கள கவிதையை படித்ததும் அதுதான் நினைவிற்கு வந்தது.இனி அந்த மாதிரி கடை கண்ணிகளை கதையிலும் கற்பனையிலும் தான் பார்க்கமுடியும் போலும்.

    பதிலளிநீக்கு