புதன், 20 மே, 2009

நடக்கும்போது நடக்கிறது

நடக்கும்போது நடக்கிறது

-------------------------------------

நடந்து போகையிலே என்னென்னமோ நடக்கிறது

செருப்பு போடாவிட்டால் தரை சுடுகிறது

புதுச் செருப்பு போடும்போது விரலைக் கடிக்கிறது

மழைக் காலத்தில் சகதி அடிக்கிறது

வேக வண்டிகளால் தண்ணீ அபிஷேகம்

ஓரமாகப் போனால் கல்லும் மண்ணும்

நடுவே போனால் தார்க்கல் ஒட்டுகிறது

அவசரமாக ஓடும்போது செருப்பு பிய்கிறது

நிதானமாகப் போனாலும் யாரோ திட்டுகிறார்கள்

கார் ஒன்று வாங்கி விடலாம் பணம்தான் வேண்டும்

--------------------------------------நாகேந்திர பாரதி

------------------------------------------------------------------------------

4 கருத்துகள்:

 1. அருமையான கவிதை.

  வாழ்வில் பல தருணங்களில் ஏற்படும் சிறு சிறு தடங்கல்களை அழகாக உணர்த்தியிருக்கிறீர்கள்.

  பாராட்டுக்கள் !!

  பதிலளிநீக்கு
 2. //கார் ஒன்று வாங்கி விடலாம் பணம்தான் வேண்டும்//

  விடுங்க பாஸ்.. நடக்கும்போது நடக்கும் :-)

  பதிலளிநீக்கு
 3. ரசித்தேன்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு